பிள்ளையான், கருணா, வரதராஜபெருமாள், ஹிஸ்புல்லாவுடனான டீல் என்ன?: மஹிந்தவிடம் கேள்வி!

மஹிந்த ராஜபக்சவிடம் நான்கு கேள்விகளை எழுப்பியுள்ள சஜித் பிரேமதாச, அது தொடர்பில் மக்களிற்கு பகிரங்கமாக பதிலளிக்குமாறும் சவால் விடுத்துள்ளார்.

பிள்ளையானுடனான இரகசிய கொடுக்கல் வாங்கல், வரதராஜ பெருமாளுடனான கொடுக்கல் வாங்கல், கருணா அம்மானுடனான கொடுக்கல் வாங்கல், எம.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடனான கொடுக்கல் வாங்கல் பற்றி பகிரங்கமாக குறிப்பிட முடியுமா என சவால் விடுத்துள்ளார்.

நத்தார் தினத்தில் வழிபாட்டில் ஈடுபட்ட ஒருவரை கொன்ற வழக்கில் கைதாகியுள்ள ஒருவரை விடுவிக்க முயற்சியெடுக்கப்படுகிறது. பலவந்தமாக பிள்ளைகளை கடத்திச் சென்று ஈழயுத்தத்தில் ஈடுபடுத்திய பிள்ளையானை விடுவிப்பது கிழக்கு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரந்தலாவ பகுதியில் பிக்குகளை கொன்ற கருணாவுடனும், ஈழக்கொடியை ஏந்திய வரதராஜ பெருமாளுடனும் என்ன கொடுக்கல் வாங்கல் வைத்திருக்கிறீர்கள்?

இரண்டாவது வாக்கை சகோதரருக்கு அளிக்கும்படி கூறிய ஹிஸ்புல்லாவுடன் என்ன தொடர்புள்ளது என தெரிவிக்குமாறு கோரி, மஹிந்தவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here