பெரமுனவின் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற யுவதி துஷ்பிரயோகம்!

பொதுஜன பெரமுனவினால் நேற்று  (7) ஹேமதகம பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு சென்ற யுவதியொருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 23 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்திற்கு சென்ற மனைவி, மகள் வீடு திரும்பாததையடுத்து, ஹேமதகம பொலிஸ் நிலையத்தில் தந்தை முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து விசாரணையை தொடங்கிய பொலிசார், இளைஞனை கைது செய்துள்ளனர்.

பிரச்சார கூட்டத்தின் பின்னர் பேருந்தில் வீடு திரும்பிய சமயத்திலேயே யுவதி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here