கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார்: நடிகர் ரஜினிகாந்த்

அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை கமல்ஹாசன் மறக்க மாட்டார் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-

எனது கலையுலக அண்ணன் கமல்ஹாசன் மற்றும் அனைவருக்கும் நன்றி. என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, குரு, பிதாமகன் பாலச்சந்தர்தான். அரசியலுக்கு வந்தாலும், தாய்வீடான சினிமாவை மறக்கமாட்டார் கமல். கலையை உயிராக கொண்டிருப்பவர் கமல்ஹாசன்.

கிராபிக்ஸ் இல்லாத காலத்திலேயே அபூர்வ சகோதர்கள் படம் எடுத்தவர் கமல்ஹாசன். அபூர்வ சகோதரர்கள் படத்தை பார்த்து விட்டு நள்ளிரவு கமல்ஹாசன் வீட்டிற்கு சென்று வாழ்த்தினேன். ஹேராம் படத்தை 30, 40 படத்தை பார்த்துள்ளேன். நான் அடிக்கடி பார்க்கும் படங்கள் ஹேராம், காட்பாதர், திருவிளையாடல் ஆகிய படங்கள்தான்” இவ்வாறு அவர் பேசினார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here