ஹிஸ்புல்லாவின் ஆதரவு எமக்கு தேவையில்லை; உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட யாருடைய ஆதரவும் தேவையில்லை: மஹிந்தானந்த!

ஹிஸ்புல்லாவின் எந்தவொரு ஆதரவும் எமக்கு தேவையில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்ட எந்தவொரு தரப்பின் ஆதரவும் எமக்கு தேவையில்லை என தெரிவித்துள்ளார் மஹிந்த தரப்பு எம்.பி, மஹிந்தானந்த அளுத்கம.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மஹிந்தானந்த அளுத்கம,

“கிழக்கில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது ஆதரவாளர்களிடம் இரண்டாவது விருப்பு வாக்கை கோட்டாபாயவிற்கு வழங்குமாறு கேட்டுள்ளார். அவரது வாக்கு எமக்கு தேவையில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய யாருடைய வாக்கும் எமக்கு தேவையில்லை.

சஹ்ரானின் மனைவியை வைத்து சில வீடியோவை தயார் செய்து, ஜனாதிபதி தேர்தலின் முன்னர் வெளியிட்டு கோட்டாபயவிற்கு எதிரான சதி செய்ய முயற்சிக்கிறார்கள்“ என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here