வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் நபர் கைது

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 32வயதுடைய நபரோருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்

யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணிக்கும் பேருந்தில் கேராளா கஞ்சா கடத்துவதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் வவுனியா குறித்த பேரூந்தினை பொலிஸார் சோதனைக்குட்படுத்திய சமயத்தில் 1கிலோ 890 கிராம் கேரளா கஞ்சாவினை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முதூர் பகுதினை சேர்ந்த 32வயதுடைய நபரை வவுனியா பொலிஸார் நேற்று இரவு 9.00 மணியளவில் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here