ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல்

வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. வரும் திங்களன்று பேரறிவாளன் பரோலில் வெளியே வரவிருக்கிறார்.

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சட்டத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் உறுதி செய்துள்ளார். ஆயுள் தண்டனைக் கைதியாக உள்ளவர்களுக்கு சிறை விதிகளின்படி வழங்கப்படும் பரோல்தான் இது.

கடந்த 2017ம் ஆண்டு பேரறிவாளன் பரோலில் வெளியே வந்தார். தற்போது அந்தப் பரோலுக்குப் பிறகு 2 ஆண்டுகள் பூர்த்தி அடைந்து விட்டதால் இன்னொரு 30 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது.

இந்த 30 நாட்கள் என்பது அவர் விருப்பப்படும் நாட்களிலிருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here