டொரண்டோவுக்கான தனி அரசியல் சாசனம்

கனடாவின் டொரண்டோ நகரத்திற்கான தனி அரசியல் சாசனம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இதற்கான உத்தேச வரைபொன்று வெளியிடப்பட்டுள்ளது. வீடமைப்பு, போக்குவரத்து, கல்வி போன்ற விடயங்களில் தீர்மானங்களை மேற்கொள்ள, ஒண்டாரியோ மாநில அரசின் அனுமதிக்காக காத்திருக்காமல், டொரோண்டோ தனித்து இயங்கும் நோக்கில் இந்த சாசனம் கொண்டுவர முயற்சிக்கப்படுகிறது.

முன்னாள் டொரோண்டோ நகர முதல்வர்கள், முன்னாள் ஒண்டாரியோ மாகாண முதல்வர்கள் உள்ளடங்களானோர் இந்த யோசனைக்கு ஆதரவளித்துள்ளனர்.

கல்கரி, எட்மண்டன், வின்னிபெக், வான்கூவர் ஆகிய நகரங்கள் தமக்கென தனியான அரசியல் சாசனங்களை கொண்டுள்ளன. டொரொண்டோவுக்கான தனி சாசனத்தை கொண்டுவரும் முயற்சி வெற்றிபெற்றால், ஒண்டாரியோவில், தமக்கென தனியான அரசியல் சாசனத்தை கொண்ட முதல் நகரமாக டொரோண்டோ இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here