ஹப்பி பேர்த் டே அப்பா!

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7 ம் திகதி கொண்டாடப்படுகிறது. அவரருக்கு பல தரப்பிலிருந்தும் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, கமல்ஹாசன் திரையுலகில் அறிமுகமாகி 60 வருடங்கள் ஆகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக வருகிற நவம்பர் 7,8,9 ஆகிய திகதிகளில் மூன்று தொடர் நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இன்று (7) தனது சொந்த ஊரான பரமக்குடியில் தனது தந்தை சீனிவாசனின் சிலையைத் திறந்து வைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில் நடிகையும் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதி ஹாசன் தனது தந்தை குறித்து பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிறந்த நாள் வாழ்த்துகள் பாபுஜி. நாம் மீண்டும் பரமக்குடி சென்று கொண்டாடவிருக்கிறோம். முக்கியமாக நாங்களும் உங்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here