அமலாபாலின் புதிய காதலர் இவரா?

தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை இரண்டு வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது. பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

பின்னர் சமீபத்தில் தான் அமலா பாலின் முன்னாள் கணவர் ஏ.எல் விஜய் ஐஸ்வர்யா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இது குறித்து அமலா பாலிடம் கேட்டதற்கு, தான் ஒரு காதலில் இருப்பதாகவும் ஆனால், அவர் திரைத்துறையை சேர்ந்தவரல்ல என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், திருமணம் குறித்து கூறிய அமலா பால், நான் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகிறேன். ஆதலால், இப்போதைக்கு திருமணம் குறித்த எந்த ஒரு திட்டமும் இல்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது இவர் தான் அமலா பாலின் காதலரா என சந்தேகத்துடன் கேட்குமளவிற்கு அமலா பால் வெளியிட்ட புகைப்படங்களில் ஒருவர் தென்படுகிறார். அந்த நபர் அமலா பாலின் பிறந்தநாள், திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம், இமயமலைக்கு சென்ற புகைப்படம் உள்ளிட்ட அனைத்திலும் அமலா பாலுடன் போஸ் கொடுத்துள்ளார்.

எனவே, இவர் தான் அமலா பால் சொன்ன அந்த நபரோ என கோலிவுட்டில் சந்தேகத்துடன் கிசு கிசுக்கப்படுகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here