மன்னிப்பு கோரியது பெப்பர்மின்ட் கபே!


தமிழில் பேச முடியாதென ஊழியர்களிற்கு அராஜக கட்டுப்பாடு விதித்த கொழும்பு பெப்பர்மின்ட் கபே (Peppermint Café) தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு மும்மொழியிலும் மன்னிப்புக்கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

நிறுவனத்தின் அறிவிப்பு பலகை ஒன்றில் காணப்பட்ட, தமிழ் மொழி பேசும் மக்களை அவமானப்படுத்திய, தமிழ் மொழி தொடர்பான முறையற்ற வாசகங்கள், உலகம் முழுக்க தமிழ் மொழி பேசும்/எழுதும் இணையர்களின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.

இவ்விவகாரம், இலங்கை அரசகரும மொழிகள் துறை அமைச்சர் மனோ கணேசனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அமைச்சரின் பணிப்புரையின் பேரில் அரசகரும மொழிகள் ஆணைக்குழு தலைவர், இந்நிறுவனத்திடம் இச்சம்பவம் தொடர்பில் கடிதம் மூலம் விளக்கம் கோரியிருந்தார்.

இக்கடிதத்துக்கு பதிலாக குறிப்பிட்ட நிறுவனத்தினர் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ள தமிழ், சிங்கள, ஆங்கில மொழிகளிலான விளக்க கடிதங்களில், இந்த அறிவிப்பு பலகையில் காணப்பட்ட வாசகங்கள் தொடர்பில் மன்னிப்பு கோரி, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here