பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார்

பரவை முனியம்மா பாட்டி நலமுடன் வீடு திரும்பினார்.

தமிழில் தூள் திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சிரிக்க வைத்தும், குத்தாட்டம் போட வைத்தும் பிரபலமானவர் நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா.

வெள்ளித்திரையில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் சமையல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தார். சமீபத்தில் கிட்னியில் ஏற்பட்ட பிரச்னையால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் கசிந்ததது. ஆனால் அது உண்மையில்லை என பரவை முனியம்மாவே தான் நலமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பரவை முனியம்மா, “இலவச மருத்துவம் பார்த்த வேலம்மாள் மருத்துவ நிர்வாகத்திற்கும், அதற்காக மருத்துவமனையை தொடர்ப்பு கொண்டு உதவிய ஜசரி கணேஷ் அவர்களுக்கும், நடிகர் சங்கத்தின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here