13 வயது சிறுமியை சீரழித்த சிறிய தந்தைக்கு விளக்கமறியல்!

பலாங்கொட பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் தந்தைக்கும், தாய்க்கும் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து, கணவர் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன்பின்னர் தாய் இரண்டாவதான இன்னொருவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

தாயின் இரண்டாவது கணவராலேயே சிறுமி சீரழிக்கப்பட்டிருந்தார்.

சிறுமி தனது பாடசாலை ஆசிரியையிடம் இது குறித்து தெரிவித்ததையடுத்து, பாடசாலை நிர்வாகத்தினால் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளிற்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பொலிசாருக்கு விடயம் அறிவிக்கப்பட்டு, நேற்று ஆசாமி கைதானார்.

இன்று அவர் பலாங்கொட நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here