2ம் திருமணம் செய்த தென்னாபிரிக்காவின் முன்னாள் கப்டன்!

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டன் க்ரேம் ஸ்மித், 2வது முறையாகத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2011ல் ஐயர்லாந்து பாடகி மார்கன் டீனைத் திருமணம் செய்தார் ஸ்மித். இருவருக்கும் ஒரு மகன், மகள் உண்டு. எனினும் நான்கு வருடத்துக்குப் பிறகு 2015ல் இருவரும் விவாகரத்து பெற்றார்கள்.

பிறகு, ரோமியைக் காதலித்து வந்தார் ஸ்மித். ரோமிக்கும் முதல் திருமணம் மூலமாக இரு குழந்தைகள் உண்டு. 2016ல் ரோமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் 5 வருடக் காதலுக்குப் பிறகு, கடந்த நவம்பர் 2 அன்று ரோமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார் 38 வயது ஸ்மித்.

இத்தகவலை அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இத்திருமணத்துக்கு 5 குழந்தைகளும் வந்திருந்தார்கள்.

22 வயதில் கப்டனான ஸ்மித், தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் இளம் கப்டன் என்கிற பெருமையை அடைந்தார். 117 டெஸ்ட்டுகளில் விளையாடி, 9265 ரன்களை எடுத்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here