மார்பகங்களின் அளவு வித்தியாசப்படுகிறதா?… கவலை வேண்டாம்: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 18

பெண்- பெயர் குறிப்பிடவில்லை (19)
யாழ்ப்பாணம்

எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை. இரண்டு மார்பங்களும் சம அளவில் இல்லை. சிறிய வித்தியாசமாக இருப்பதை போல தெரிகிறது. ரீசேர்ட் போன்ற உடைகளை அணிய முடியவில்லை. உள்ளாடைகள் வாங்கும் போதும் குழப்பமாக உள்ளது. யாரும் உற்றுப்பார்த்தாலே சங்கடமாக இருக்கிறது. இந்த பிரச்சனையை எப்படி தீர்க்கலாம்?

டாக்டர் ஞானப்பழம்: அன்பு தங்கையே, இது ஒரு பிரச்சனையே இல்லை. இதுதான் வழமை. பொதுவாக பெண்களிற்கு இரண்டு மார்பகங்களும் ஒரே அளவாக இருப்பது இல்லை. சிறிய வித்தியாசம் இருக்கும். நம் உடலில், இரண்டு இரண்டாக உள்ள கைகள், கால்கள், காதுகள், கண்கள், புருவங்கள் என எதுவும் மிகத் துல்லியமாக, ஒரே அளவாக இருப்பது இல்லை. அப்படித்தான் இதுவும். இதற்காகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

பிரா சைஸை எப்படிக் கண்டுபிடிப்பது?

கடைக்காரரிடம் போய், நம்முடைய சைஸ் என்ன என்று கேட்பது தர்மசங்கடமான விஷயம். கடையில் எண்ணற்ற டிசைன்களில் அளவுகளில் பிராக்கள் கிடைக்கின்றன. புதிதாக அணியும் இளம்பெண்களுக்கு அது குழப்பத்தை ஏற்படுத்தும். பொதுவாக 28, 30, 32 என்ற அங்குல அளவுகளில் பிரா கிடைக்கும். அதுபோலவே ஏ,பி,சி,டி என்ற நான்கு கப் சைஸ்களில் பிரா கிடைக்கும். உதாரணத்துக்கு 34 அங்குல அளவு என்பது உடம்பின் ‘பெல்ட் சைஸ்’ எனப்படும்.

பெல்ட் சைஸ்:

மார்பகத்தின் கீழே டேப்பினால் உடம்பின் சுற்றளவை அளக்க வேண்டும் (படம்). உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குல அளவு ஒற்றைப்படை எண்ணாக இருந்தால், அதனுடன் ஐந்து அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 29 அங்குலம் என்றால்… 29 + 5=34.

ஒருவேளை உங்கள் உடம்பு சுற்றளவின் அங்குலம் இரட்டை எண்ணில் வந்தால், ஆறு அங்குலத்தைக் கூட்டிக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு உடல் சுற்றளவு 28 அங்குலம் என்றால்… 28 + 6=34.

அடுத்து கப் சைஸ்…

உங்கள் உடல் சுற்றளவை உங்கள் மார்பகத்தின் மேல் வைத்து அளக்கவும். (படம்). இந்த அளவு 30 அங்குலம் என்று கொள்வோம்.

பெல்ட் சைஸைவிட இரண்டு அங்குலம் வரை வித்தியாசம் இருந்தால் கப் சைஸ் A. 2 – 4 என்றால் கப் சைஸ் B. 5 – 6 அங்குல வித்தியாசம் என்றால் கப் சைஸ் C. 6 அங்குலத்துக்கு மேல் வித்தியாசம் என்றால் கப் சைஸ் D.

டேப்பை எடுங்கள்… பெல்ட் சைஸை பாருங்கள். கப் சைஸை கணக்கிடுங்கள். சரியான அளவுகளில் வாங்கி அணியுங்கள். கச்சிதமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பிரா அணிவது அவசியமா?

பிரா அணிவது குலுங்கல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஜக்கெட், புடவை அணிபவர்களுக்குப் பெரும்பாலும் இது அவசியம் இல்லை. மற்றபடி, எடுப்பாகக் காட்டுவதற்காகவும் பெரிதாகக் காட்டுவதற்காகவும் பலர் விரும்புகிறார்கள். பெரிதாக இருக்கும் மார்பகம் கீழே சரிந்து தோற்றமளிக்கும். அதைத் தாங்கி நிறுத்தவும் பலர் பிரா அணிகிறார்கள்.

மார்பகம் என்ன அளவு இருக்க வேண்டும்?

ஒவ்வொரு பெண்ணுக்கும் மார்பகத்தின் அளவு வேறு|படுகிறது. சிறியதாக இருக்கிறது என்பதோ, பெரியதாக இருக்கிறது என்பதோ பிரச்னையே இல்லை. அது அவரவர் உடல்வாகு பொறுத்தது.

எம்.பிரதாப் (27)
அக்கராயன்

செக்ஸ் உறவு மனிதர்களிற்கு அவசியமா? குழந்தை பெற்றுக்கொள்ள நவீன மருத்துவமுறைகள் வளர்வது எதிரகாலத்தில் செக்ஸ் உணர்வை பாதிக்க வாய்ப்பிருக்குமா?

டாக்டர் ஞானப்பழம்: பூமியில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு செல் உயிர்கள் தோன்றின. அவற்றில் ஆண்-பெண் பேதம் கிடையாது. ‘ஏசெக்ஸுவல்’ (Asexual) என்ற முறையில்தான் அவை இனப்பெருக்கம் செய்தன. அதாவது, ஒரு செல் பிரிந்து இரண்டு செல்களாவதே ஏசெக்ஸுவல் இனப்பெருக்கம். பல நுண்ணுயிர்கள் இன்றும் அப்படித்தான் இனப்பெருக்கம் செய்கின்றன. இதை ‘கொப்பி அண்டு டிவைடெட்’ (Copy and Divided) என்று சொல்வார்கள். இதுதான் மிக எளிமையான இனப்பெருக்க முறை.

மனிதர்களைப் பொறுத்தவரை, இணையைத் தேடி, காதலித்து, திருமணம் செய்து, உடலுறவில் ஈடுபட்டுக் குழந்தைகள் பெற்றுக்கொள்வது கடினமான, காலம் தாழ்த்தும் செயல். இவ்வளவு கடினமான ஆண்-பெண் உடலுறவை உயிரினங்கள் தேர்வு செய்ததற்கான காரணம் என்ன, அதற்கான அவசியம் என்ன? உடலுறவு என்பது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல; அன்பு, காதல், உணர்வு, ஸ்பரிசம், குடும்பம் என காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். கணவன் – மனைவி இடையே சண்டை வந்தால், பெரும்பாலும் சமாதானம் செய்வதும் தாம்பத்ய உறவே.

1886-ம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான அகஸ்ட் வீஸ்மன், “செல்கள் பிரிந்து நடக்கும் இனப்பெருக்கத்தில் ஒரு முக்கியமான பிரச்னை இருக்கிறது. தாய் செல்லுக்கு இருக்கும் மரபு ரீதியான நோய்கள், பிரச்னைகள், சேய் செல்லுக்கும் கடத்தப்படும். இரண்டு தனித்தனி உயிர்களின் மாறுபட்ட டி.என்.ஏ.க்கள் ஒன்றிணைந்து, ஓர் உயிரை உருவாக்கும் போது மரபு நோய்கள் கடத்தப்படுவது குறைக்கப்படுகின்றன’’ என்று கூறினார். ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த ஸ்டெர்லிங் என்ற ஆராச்சியாளர், “ஒரு நோய் வந்தால், அதைத் தடுக்கும் ஆற்றல், ஆண்-பெண் உடலுறவின் மூலம் பிறக்கும் உயிரினங்களுக்கே அதிகமாக இருக்கிறது’’ என்கிறார்.

ஹவாயைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் எலைன் ஹேட்ஃபீல்ட் (Elaine Hatfield), “ஓர் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் பார்த்து, நேசித்து, குழந்தை பெற்றுக்கொள்ளும்போது அவர்களின் சந்ததிகளின் ஆயுள் நீடிக்கும்’’ என்கிறார்.

என்னென்ன காரணங்களுக்காக செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, 2010ல் Sexuality and Culture என்ற இணையதள ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இந்த ஆய்வில் பங்கு பெற்றவர்களின் பதில்கள் வெவ்வேறு விதமாக இருந்தன. நல்ல மனநிலைக்காக, சோகத்தைக் குறைக்க, கடமைக்காக, தன்னம்பிக்கையை அதிகரிக்க, தன் இணை மேலுள்ள காதல், அன்பின் தேவைக்காக, இணையிடமிருந்து இன்பம் பெறுவதற்காக, ஆர்வத்துக்காக…. இப்படிப் பல பதில்கள். இதில் வெகு சிலரே குழந்தைக்காக என்று சொல்லியிருந்தார்கள்.

டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆய்வொன்று, ஆண்-பெண் உறவுக்கான காரணத்தை நான்காகப் பிரித்திருக்கிறது. அவை உடல் ரீதியான காரணங்கள்; உணர்வை மையமாகக் கொண்ட காரணங்கள்; சுயநலத்துடன் உறவில் ஈடுபடுவது; கணவனும் மனைவியும் விரும்பி உறவில் ஈடுபடுவது. பொதுவாக, ஆண்கள் உடல் ரீதியான இன்பத்துக்காகவே செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். ஆனால், பெண்கள் உறவுக்காகவும், தன் காதலை வெளிப்படுத்துவதற்காகவும் செக்ஸ் வைத்துக்கொள்கிறார்கள்.

கணவன் மனைவி தாம்பத்ய உறவில் பிரச்னை வருவதற்கு மூல காரணமே செக்ஸ் தான். செக்ஸ் பற்றி எவ்வளவு தெரிகிறது என்பதே, திருமண வாழ்க்கையின் இன்பதுன்பங்களைத் தீர்மானிக்கிறது. ஆகவே, அந்த உணர்விற்கு ஆபத்திருக்காது!

முந்தைய பாகத்தை படிக்க: டாக்டர் ஞானப்பழத்தை கேளுங்கள் 17

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here