மைனா நந்தினி திடீர் திருமணம்!

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற மைனா நந்தினிக்கும் நடிகர் யோகேஸ்வரனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இதுகுறித்த தகவலை இருவரும் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இருவருக்கும் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கு முன்பு மைனா நந்தினி, கார்த்திகேயன் என்பவரைத் திருமணம் செய்தார். ஆனால், 2017-ல் கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார்.

அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் ஆகிய தொடர்களில் மைனா நந்தினி தற்போது நடித்து வருகிறார். நாயகி, ராஜா ராணி, சத்யா போன்ற தொடர்களில் யோகேஸ்வரன் நடித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் இருவரும் பகிர்ந்துள்ள புகைப்படங்கள்:

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here