மாநகரசபை கழிவகற்றல் வாகனத்தில் பாடசாலை செல்லும் மாணவர்கள்!

அரியாலை பூம்புகார் பகுதி பாடசாலை மாணவர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை கழிவகற்றல் உழவு இயத்திரத்தையே பாடசாலை போக்குவரத்து வாகனமாக பயன்படுத்தும் அவலம் இடம்பெறுகிறது.

அரியாலை – நாவலடி வீதியில் பேருந்து சேவைகள் சீராக இடம்பெறுவது இல்லை. அரச பேருந்து சேவை நாளொன்றிற்கு ஒரு தடவையே இடம்பெறுகின்றது. அதனால் பாடசாலை மாணவர்கள் உள்பட பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.

நாவலடி வீதி நீண்டகாலமாக திருத்தப்படாமையால்தான் பொதுப் போக்குவரத்து சேவைகள் சீராக இடம்பெறுவதில்லை என பூம்புகார் மக்கள் அதிகாரிகளுக்கு பல தடவைகள் அறிவித்த போதும், அந்த வீதி இன்னமும் சீரமைக்கப்படவில்லை.

பூம்புகாரிலிருந்து நாவலடி சுகாதார நிலையத்துக்கு கிளினிக்கு வரும் கர்ப்பிணிப் பெண்கள், பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் கழிவகற்றலில் ஈடுபடும் உழவு இயந்திரத்தில் பாடசாலை மாணவர்கள் பயணிப்பது, பாதிப்புக்களை ஏற்படுத்துமென எச்சரிக்கப்படுகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here