12 ராசிக்குமான குருப்பெயர்ச்சி பலன்கள் – 2019

ஒவ்வொரு ஆண்டும் குருப்பெயர்ச்சி நடைபெற்றாலும் இந்தாண்டு குருபகவான் தனது சொந்த வீடான தனுசு ராசிக்கு 5ல் இடம் பெயர்கிறார். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அற்புத நிகழ்வாகும்.

குருபார்க்க கோடி நன்மை என்பார்கள். அந்தவகையில் 12 ராசிக்கும் இந்த குருப்பெயர்ச்சி எப்படி இருக்கப்போகிறது என்பதை பற்றி விரிவாகப் பார்ப்போம்.

எதிலும் துணிச்சலுடன், இறங்கிப் போராடும் மேஷ ராசி அன்பர்களே!

குருபகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருந்து ஒன்பதாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைகிறார். ஒன்பதாம் இடத்திற்கு பெயர்ச்சியாகும் குருபகவானால் பெயர், புகழ், செய்தொழிலில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய காலமாகும். நன்மையடையும் ராசிகளில் மேஷ ராசியும் ஒன்று.

உங்கள் திறமைகள் வளர்த்துக்கொள்ள தக்க பயிற்சிகளைச் செய்வீர்கள். செயல்களில் சுறுசுறுப்பு கூடும். சோம்பலை மூட்டைகட்டி வைத்துவிட்டு புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தடைபட்டு வந்த பல்வேறு விஷயங்கள் இப்போது வெற்றிகரமாக நடைபெறும்.

உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். வியாதிகள் குறையும். குடும்பத்துடன் புனிதப் பயணங்களை மேற்கொள்வீர்கள். திடீர் யோகம், வருமானம், அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரப்போகும் நேரமிது. குறிப்பாக பொருளாதாரத்தில் மிகவும் கவனமாக இருக்கும். செய்தொழிலில் முன்னேற்றம் சிறப்பாக அமையும். வேறு புதிய தொழிலிலும் ஈடுபட்டு இரட்டை வருமானம் பெற வாய்ப்புகள் உள்ளது. அசையும் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

படிபடியாக கஷ்ட பலன்கள் அனைத்தும் நிவர்த்தியாகி பெரும் ராஜயோக பலன்கள் நடைபெறும் காலகட்டமிது. நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து புதிய தொழில்களில் ஈடுபடுவீர்கள். குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். வழக்குகளால் சாதகமான பலனை காண்பீர்கள். புது வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வருவாய் கிடைக்கும். நெடுநாட்களாக விற்காமல் இருந்த சொத்தும் நல்ல விலைக்கு வரும். வழக்கின் மூலம் நிலம் கைவிட்டுப்போனாலும் அது மேலிடத்து அப்பீல் பேரில் மீண்டும் கைக்கு வந்து சேர்ந்துவிடும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியமும், வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் உண்டாகும். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயர்ந்தநிலையில் இருக்கும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு..

அலுவலகத்தில் நிலவிய இறுக்கமான சூழ்நிலைகளிலிருந்து விடுபட்டு நிம்மதியைக் காண்பார்கள். சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். உங்களின் அசாத்தியத் துணிச்சல் உங்களின் வேலைகளில் வெற்றியைத் தேடித்தரும். மேலதிகாரிகள் உங்களைப் பாராட்டும் வகையில் நிலைமை உருவாகும்.

வியாபாரிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பல வழிகளில் லாபம் வரும். வியாபாரத்தில் புதிய வளர்ச்சியைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். உங்களின் அதிர்ஷ்ட விற்பனையைச் சீர்படுத்தவும், வாடிக்கையாளர்களின் தேவைக்கு இந்த காலகட்டத்தில் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். புதிய முதலீடுகளை இந்த காலகட்டத்தில் செய்ய வேண்டாம். அதே சமயம் கடையை விரிவுபடுத்த சிறிது செலவு செய்யலாம்.

விவசாயிகளுக்கு..

மகசூல் நன்றாக இருந்தாலும் கொள்முதல் விற்பனை சீராக இருக்காது. இடைத்தரகர்கள் உங்களின் லாபத்தைப் பங்குபோடக் காத்திருப்பார்கள். பூச்சி மருந்துக்கும், கால்நடைகளுக்கும் சிறிது செலவு செய்ய நேரிடும். பழைய குத்தகை பாக்கிகளும் வசூலாகும்.

அரசியல்வாதிகளுக்கு..

பொச்சேவையால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் ஆனாலும் தேவையில்லாமல் யாருக்கும் அறிவுரை சொல்ல வேண்டாம். கட்சி மேலிடம் உங்களின் கோரிக்கைகளைக் கருணையுடன் பரிசீலிக்கும். அரசாங்க அதிகாரிகளால் சில நன்மைகளையும் பெறுவீர்கள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் மாற்றுக்கட்சியினரும் ஒத்துழைப்புத் தருவார்கள்.

கலைத்துறையினருக்கு..

முயற்சிகள் அனைத்தும் நிறைவேறும். உங்களின் செயல்கள் அனைத்தும் மக்களைக் கவரும் விதத்தில் அமையும். இந்தக் காலகட்டத்தில் உங்களின் செயல்களில் தனி முத்திரையைப் பதிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் தேடிவரும். சம்பளத்தைக் குறைத்துக்கொண்டு ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும். மற்றபடி ரசிகர்களின் ஆதரவு உங்களுக்கு உற்சாகமாகும்.

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் விரக்தியிலிருந்து விடுபடுவார்கள். தங்களை நாடிவரும் உறவினர்களுக்கு தயங்காமல் உதவி செய்வீர்கள். குடும்பத்தினரிடம், அன்பைப் பெறுவார்கள். உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பேண யோகாக பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். பிறரிடம் பேசும்போது கவனமாக இருக்கவும்.

மாணவமணிகளுக்கு..

படிப்பில் அக்கறை காட்டுவார்கள். அதேநேரம் நாளை படித்துக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுவதைத் தவிர்க்கவும். விளையாடும் நேரங்களில் கவனமாக இருக்கவும்.

பரிகாரம்: ராம பக்த அனுமனை வழிபட்டு வரவும்.

அன்புக்கு அடிபணியும் ரிஷபராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 7ம் இடமான சப்தம ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் தற்போது நடக்கவிருக்கும் குருப் பெயர்ச்சிக்குப் பின் 8ம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு செல்ல இருக்கின்றார். தற்போது நடந்துவரும் அஷ்டம சனியும், கேதுவும் மட்டுமல்லாமல் அஷ்டம குருவும் இணைந்து சில மாதங்களுக்கு செயல்படுகிறார்கள்.

இது வாழ்க்கையில் பலவிதமான புதிய அனுபவங்களையும், சில சோதனைகளையும் கடந்து வெற்றி வாகையை அளிக்கக்கூடிய காலங்களாக இருக்கும். குடும்பத்தில் விரும்பத்தகுந்த மாற்றங்களைக் காண்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். சிலருக்கு பட்டம், பதவி உயர்வு முதலியன கிடைக்கும் யோகமும் உண்டாகும். தொழிலுக்கேற்றவாறு உங்கள் தகுதிகளை உயர்த்திக்கொள்வீர்கள்.

வருமானம் எதிர்ப்பாத்த அளவுக்குக் கிடைக்கும். அரசாங்க உதவியும் பெரும்பாலானோருக்குக் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேநேரம் அனைத்துச் செயல்களிலும் முதலில் சில சிக்கல்கள் ஏற்பட்டு பிறகு அது சரியாகும்.

வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் படிப்படியாகத் தீரும். பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படாது. கடினமான நிலமைகளை உங்கள் அறிவுத்திறனால் சமாளித்துவிடுவீர்கள். விடாமுயற்சியுடன் எந்த காரியத்தையும் செய்து வெற்றியை காண்பீர்கள்.

வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சுணங்கிவந்த சுபகாரியங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெறத் தொடங்கும். பழைய கடன்களைத் திருப்பி அடைத்துவிடும் காலக்கட்டமாக இது அமையும்.

வழக்குகளால் சாதகமான திருப்பங்களை எதிர்பார்க்க முடியாது. மற்றபடி ஆன்மீக பலம் அதிகரிக்கும். புனித தலங்களுக்கு யாத்திரை சென்று வரும் பாக்கியமும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்த குருப்பெயர்ச்சியினால் அனைத்து வேலைகளும் திட்டமிட்டதுபோல் நடைபெறும். உழைப்புக்கேற்ற ஊதியமும் கிடைக்கும். உங்கள் பணிகளில் மேலதிகாரிகள் திருப்தியடைவார்கள். அதேநேரம் அலுவலகத்தில் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம். உங்கள் வேலைகளை உடனுக்குடன் முடிக்கவும். மற்றபடி வீடுகட்ட கடன்கள் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு..

சிக்கல்களைத் தாண்டி சுறுசுறுப்புடன் பணியாற்றுவார்கள். வருமானம் பலவகையிலும் உங்களைத் தேடிவரும் அதேசமயம் செலவு செய்யும் நேரத்தில் கவனமாக இருக்கவும் பழைய கடன்கள் வசூலாகும். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருப்பதால் கவனமாக இருக்கவும்.

இதையும் படிக்கலாம்: குருப்பெயர்ச்சியாகும் போது குரு பகவான் தரக்கூடிய யோகங்கள் என்னென்ன?

விசாயிகளுக்கு..

வருமானம் திருப்திகரமாக இருக்கும். குறிப்பாக தானியப் பொருட்கள் விற்பனையில் நல்ல பலனைப் பெறுவீர்கள். புதிய கால்நடைகளை வாங்கிப் பலன் பெறலாம். சந்தையில் போட்டி, பொறாமைகளைச் சாதுரியமாகச் சமாளிப்பீர்கள். மேலும் போட்டிக்கேற்ப விலைகளை நிர்ணயித்து லாபமடைவீர்கள். இந்தக்காலகட்டத்தில் புதிய குத்தகைகள் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு..

இந்த குருபெயர்ச்சியால் கட்சியில் மதிப்பு மரியாதை உயரும். இதனால் அனைத்து வேலைகளும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர். எதிர்க்கட்சியினரிடம் அனாவசிய நெருக்கம் வேண்டாம். உங்களின் செயல்கள் எதிர்பார்த்த திருப்பங்களை ஏற்படுத்தும். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு..

எதிர்பார்த்த அதிர்ஷ்டகரமான திருப்பங்கள் ஏற்படும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் சூழ்நிலை உருவாகும். அந்தஸ்து உயரும். இதுவரை வெறுத்து ஒதுக்கியவர்களும் உங்களைப் புகழும் காலகட்டமிது. வருமானம் சீராக இருக்கும். பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்கலாம்.

பெண்மணிகளுக்கு..

உற்றார் உறவினர்களைச் சந்தித்து மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நெடுநாள் பார்க்காமல் இருந்த கோவில்களுக்குச் சென்றுவருவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிட்டும். இந்தக் குருப்பெயர்ச்சியால் சுப நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள்.

மாணவமணிகளுக்கு..

அதிகம் உழைத்து படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சிலருக்கு வெளியிலும் சென்றுக் கல்வி பயில வாய்ப்புகள் கிடைக்கும்.

பரிகாரம்: விநாயகப் பெருமானை வழிபட்டுவர அனைத்து நலன்களும் கிட்டும்.


விடா முயற்சியுடன் எந்த காரியத்தையும் கச்சிதமாக முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 6ம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் இருந்துவந்த குருபகவான் ராசிக்கு 7ம் இடமான சப்தம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார். இதுவரை மனதாலும், உடலாலும் பல்வேறு இன்னல்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்த நீங்கள் இதற்குமேல் குருபகவானின் அருட்கடாட்சத்தை முழுமையாகப் பெற போகிறீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சியால் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரப்போகிறது. செய்தொழிலிலும் பெரியதொரு முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரம் உயர்ந்தநிலையில் இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். நெடுநாளாக உங்களை வாட்டிவந்த உடலுபாதைகளிலிருந்து முழுவதுமாக விடுபடப்போகிறீர்கள்.

இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சிலருக்கு தங்கள் விருப்பம்போல் திருமணம் நடக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்களில் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பாகப்பிரிவினை போன்ற விஷயங்கள் சுமுகமாக நடைபெறும்.

முக்கிய முடிவுகள் எடுக்கும் நேரத்தில் பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். சில நேரங்களில் நண்பர்களின் அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும். உங்கள் செயல்கள் அலைந்து திரிந்து முடிக்கவேண்டிவரும். சிலருக்கு, பிபீ, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது.

செய்தொழிலில் இருந்துவந்த பிரச்னைகள் தீரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெற்றோர்களின் ஆதரவும் சிறப்பாக இருக்கும். பயணங்களால் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

குறைந்த உழைப்பால் அதிக பலன் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் பணித் திறமைகளைப் பாராட்டுவார்கள். சக ஊழியர்களின் உதவியுடன் உங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகளைப் பெறுவீர்கள். அதேநேரம் காலநேரத்தை வீணாக்காமல் உழைத்தால் மேலும் உயரிய பதவிகளைப் பெறலாம். இந்தாண்டு பணவரவுக்குக் குறைவிருக்காது.

வியாபாரிகளுக்கு..

தீட்டிய திட்டங்கள் செயல்வடிவம் பெறத் தாமதமாகும். கூட்டாளிகளுக்குள் குழப்பமான சூழ்நிலை உருவாகும். அதனால் அவர்களை கலந்தாலோசிக்காமல் எந்தச் செயலையும் செய்யவேண்டாம். வரவேண்டிய பணம் வரத் தாமதமாகும் என்பதால் திடீரென்று கடன் வாங்கும் நிலை ஏற்படும்.

விவசாயிகளுக்கு..

கொள்முதல் லாபம் அதிகரிக்கும். இதனால் கால்நடைகளை வாங்கி மகிழ்வார்கள். அதே சமயம் பாசனத்துறையில் கூடுதல் கவனம் செலுத்தவும். மற்றபடி நினைத்த வேலைகளை நினைத்த மாதிரியே செய்து முடிப்பீர்கள். பழைய குத்தகை பாக்கிகளை திரும்பச் செலுத்தி புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். புதிய உபகரணங்கள் வாங்கும் யோகமும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு..

வருமானம் சீராக இருந்தாலும் வழக்கு விஷயங்களுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மற்றபடி உங்கள் எண்ணங்கள் சரியான காலகட்டத்தில் பயனளிக்கும். மக்களின் சரியான தேவைகளுக்காகப் பாடுபடுவர். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு..

புதிய வாய்ப்புகளைக் கடும் போட்டிக்குப் பிறகே பெற முடியும். அதனால் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். சச்சரவை ஏற்படுத்தும் விஷயங்களில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். மேலும், யாரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம்.

இது உங்களுக்காக: கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு பெரிய விடிவுகாலம் இந்த ராசிக்காரர்களுக்கு!

பெண்மணிகள்..

குடும்பத்தில் இணக்கமான சூழ்நிலையைக் காண்பார்கள். கணவரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவார்கள். பிள்ளைகளுக்காகச் சிறிது செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்தின் செலவுகளுக்கேற்ப வருமானம் வந்துகொண்டிருக்கும். உங்களின் பேச்சு வன்மையால் நல்ல சந்தர்ப்பங்களைப் பெறுவீர்கள்.

மாணவமணிகள்..

கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். விளையாட்டுகளில் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளுவார்கள். பெற்றோர்களின் ஆதரவுடன் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

பரிகாரம்
குரு தட்சிணாமூர்த்தியை வழிபட்டு வர அதிக நன்மைகள் கிடைக்கும்.


 

எதையும் சிந்தித்துச் செயல்படும் கடக ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசியில் 5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து வந்த குருபகவான் இதற்குப்பின் உங்கள் ராசியில் 6ம் இடமான ருண ரோக ஸ்தானத்தில் பெயர்ச்சி அடைகிறார். இதுவரை இருந்துவந்த தடைகள் மற்றும் எதிர்ப்புகளை வெற்றிபெறக்கூடிய பொன்னான காலமாக இது அமையும்.

கடின முயற்சியின் பேரில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் செயல்களில் நிர்வாகத் திறமை பளிச்சிடும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். அதிக வட்டிக்கு வாங்கிய கடன்கள் திட்டமிட்டு அடைத்துவிடுவீர்கள். பொருளாதாரம் ஏற்றத்தாழ்வாக இருந்தாலும் முக்கிய தேவைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாது. ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

எவரையும் நேரடியாகப் பகைத்துக்கொள்ளாமல் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசிப்பழகுவீர்கள். உங்களின் பலவீனத்தைப் புரிந்துகொள்வீர்கள். உங்கள் முயற்சிகளில் அனாவசிய வேகம் வேண்டாம். நண்பர்களை உங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களை மதித்துப் பேசும் காலகட்டமாக இது அமையும்.

பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். மற்றவர்களுக்கு உதவி செய்து அதனால் பெருமை அடைவீர்கள். அனைவரிடமும் நயந்து அனுசரித்துச் சென்று உங்கள் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உங்களை எவரும் சூழ்ச்சியால் வெல்ல முடியாது. எதிரிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடுவீர்கள்.

வெளிவட்டார பழக்கவழக்கங்களால் நல்ல வரவேற்பையும் பெறுவீர்கள். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும். யோகா பிராணாயாமம் செய்வீர்கள். குழந்தைகளுக்கு திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து எதையும் செய்வீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்தாலும் அவர்களால் சிறு பிரச்னைகள் உண்டாகலாம். உங்கள் முகத்தில் வசீகரமும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் அனைவரிடமும் சுமுகமாகப் பழகுவார்கள். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். அலுவலகப் பயணங்களாலும் ஓரளவு நன்மை உண்டாகும். தடைப்பட்டிருந்த ஊதிய உயர்வு உங்களுக்குக் கிடைக்கும். உடலில் சிறிது சோர்வு காணப்படும் அதனால் சுறுசுறுப்பு குறையும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு..

கொடுக்கல் வாங்களால் சிறப்புகளைக் காண்பார்கள். கூடுதல் அக்கறையோடு வியாபாரத்தைச் செய்வீர்கள். ஓய்வில்லாமல் உழைத்து லாபத்தை அள்ளுவார்கள். புதிய கடன்களைப் பெற்று வியாபாரத்தை மேலும் விரிவுபடுத்த முயற்சி செய்வீர்கள். இருப்பினும் தேவைக்கேற்ற சரக்குகளை மட்டும் வாங்கி விற்பனை செய்யவும்.

விவசாயிகளுக்கு..

கொள்முதலில் நல்ல லாபம் கிடைக்கும். குறிப்பாகக் கால்நடைகளை வைத்திருப்போர் எதிர்பார்த்த லாபத்தை அடைவர். அதேசமயம் உழைப்பிற்கேற்ற பலனடைவதால் நிறையக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். நீர்ப் பாசன வசதிகளை மேம்படுத்திக்கொள்ள முயற்சிகளைச் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு..

பொறுப்புடன் நடந்துகொண்டு தங்கள் பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வார்கள். உங்கள் செயல்களைத் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்கவும் தலைமையிடம் நல்ல பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவும். அதே நேரம் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு..

இந்தக் காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைச் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். வருமானம் சீராக இருப்பதால் ரசிகர் மன்றங்களுக்குச் சிறிது செலவுகள் செய்ய நேரிடலாம். உங்களின் கடமையை உணர்ந்து செயல்படுவீர்கள்.

பெண்மணிகளுக்கு..

குருப்பெயர்ச்சியினால் பொருளாதாரம் திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைகளுக்கான கடமைகளைச் செவ்வனே செய்து மகிழ்வீர்கள். கணவரிடம் ஒற்றுமையோடு பழகுவீர்கள். உங்களை நாடிவரும் நண்பர்களுக்கு உதவிசெய்து நற்பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவீர்கள்.

மாணவமணிகள்..

படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். பெற்றோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்துகொள்வார்கள். பிடிவாத குணத்தை விட்டொழிக்கவும்.

பரிகாரம்

மஹாலட்சுமியை வழிபட்டு வரவும் அனைத்துவித நன்மைகளும் ஏற்படும்.


 

சவால்களை வென்று சாதனை படைக்கும் சிம்ம ராசி அன்பர்களே!

இதுவரை சுகஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனி ஐந்தாம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திலிருந்து தங்களுக்கு அனைத்து விதமான மகிழ்ச்சிகளைத் தரவிருக்கிறார்.

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக மேம்படையும். குரு தான்நின்ற இடத்திலிருந்து பாக்கிய, லாப மற்றும் ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார். மனதில் நினைத்த மற்றும் செய்யத் துவங்கிய அனைத்து காரியங்களும் வெற்றிபெறும். வீடு, மனை வாங்கும் எண்ணம் கொண்டவர்களுக்கு தகுந்த காலமாக இருக்கும்.

செய்தொழிலில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்குச் சேரவேண்டிய பங்கு கிடைத்துவிடும். அரசாங்க உதவிகள் பெறுவதற்கு ஏற்ற காலமாகும் இது. நீண்ட காலமாகத் தள்ளிக்கொண்டே சென்ற தீர்த்த யாத்திரைகளை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். மறைமுக நேர்முக எதிர்ப்புகள் விலகும்.

இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை பிரிந்திருந்த குடும்பத்தினர் ஒன்று சேருவார்கள். கடன் வாங்கியாவது தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வெளி வட்டார பழக்கவழக்கத்திலும் ஓரளவு மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நெருங்கிய நண்பர்களிடம் எதையும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆலயத் திருப்பணிகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

இதுவரை செய்யாதிருந்த முயற்சிகளைச் சுலபமாகத் திட்டமிட்டுச்செய்து செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். சிலர் கடல்கடந்து வெளிநாடு சென்றுவரும் யோகத்தைப் பெறுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலைத் திறன் அதிகரிக்கும். மேலதிகாரிகள் உங்கள் செயல்களைப் பாராட்டுவார்கள். விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் வேலைகளைத் திட்டமிட்டதுபோல் செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

வியாபாரிகளுக்கு..

இந்த ஆண்டு துணிந்து முதலீடுகளைச் செய்து எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவார்கள். மார்க்கெட்டிங் விவகாரம் உட்பட அனைத்து விஷயங்களையும் சாதகமாகவே முடிப்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். பழைய வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். தொழிலில் இருந்த மந்தநிலை விலகும்.

விவசாயிகளுக்கு..

கூடுதல் விளைச்சலைக் காண்பார்கள். பழைய நிலங்களை விற்பனை செய்து அதன்மூலம் வரும் பணத்தில் புதிய நிலத்தை வாங்குவீர்கள். புதிய குத்தகைகளை நாடிச் செல்வீர்கள். வங்கிக் கடன் உதவிகளும் கிடைக்கப்பெறுவீர்கள். கால்நடைகளுக்குச் சிறிது செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு..

எடுத்த காரியங்களில் வெற்றிகள் ஏற்படும். அரசு அதிகாரிகள் உங்களிடம் அனுசரணையாக இருப்பார்கள். உங்கள் செயல்களை நன்றாக யோசித்து செய்யவும். கட்சி வேலைகளை நிதானத்துடனும், தொண்டர்களின் ஆதரவுடனும் செய்தால் தான் முடிவு விருப்பப்படி அமையும். கடினமான வேலைகளையும் வெற்றிகரமாக முடித்து புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு..

வாய்ப்புகள் கூடத் தொடங்கும். திறமைகள் பளிச்சிடும். உங்கள் துறையில் ஆராய்ச்சி செய்வீர்கள். அதேநேரம் சக கலைஞர்களிடம் எச்சரிக்கையாக நடந்துகொள்ளுங்கள்.

பெண்மணிகளுக்கு..

பணவரவு சீராக இருக்கும். கணவரிடம் பதமாக நடந்துகொள்ளவும். குடும்பத்தில் நடக்கும் சில விஷயங்களைக் கண்டும் காணாமல் இருப்பது நல்லது. விட்டுக்கொடுத்து அனைத்துக் காரியங்களையும் சாதித்துக் கொள்ளவும். சகோதர, சகோதரிகளும் உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகச் சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகளுக்கு..

வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்துகொள்ள வேண்டாம். பழைய தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள். உங்களின் தன்னம்பிக்கையைக் கூட்டிக்கொண்டு செயலாற்றுங்கள்.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட்டு வர அதீத நன்மைகள் கிடைக்கும்.


 

கடமை தவறாத கன்னி ராசி அன்பர்களே!

இதுவரை தைரிய ஸ்தானமான 3ம் வீட்டில் இருந்த குருபகவான் வருகின்ற குருப்பெயர்ச்சியில் நான்காம் இடமான சுகஸ்தானத்திற்குப் பெயர்ச்சி அடைகின்றார். இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

செய்தொழில் எந்த முடக்கமுமின்றி சீராக நடக்கத் தொடங்கும். வருமானம் படிப்படியாக உயரும். ஓய்வில்லாமல் உழைப்பீர்கள். புதிய அனுபவங்கள் பலவகையிலும் உண்டாகும். பலமுறை தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடி வரும். வேலை இல்லாதவர்களுக்கு நேரம் போதவில்லை என்று சொல்லுமளவுக்கு வேலை வரத் தொடங்கும்.

அசையா சொத்து விஷயத்தில் இருந்துவந்த கஷ்ட நஷ்டங்களும், இழப்பும் இனி தொடராது. இல்லத்திற்குத் தேவையான நவீன ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் உங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் புகழ், கெளரவம், அந்தஸ்து ஆகியவை உயர்ந்தே காணப்படும்.

பொருளாதாரத்தில் உயர்நிலையை எட்டுவீர்கள். பாராட்டும், பணவரவும் பலவழிகளிலிருந்து வந்தவண்ணம் இருக்கும். செயற்கரிய சாதனைகளில் இறங்கி முழுமையான வெற்றியைப் பெறுவீர்கள். வழக்குகளில் சிக்கித் தவித்தவர்கள் தெய்வானுகூலத்தினால் விதிவிலக்கு கிடைக்கப்பெற்று முழுமையாக விடுபடுவீர்கள். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் உதவியும், பாதுகாப்பும் கிடைக்கும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் விலகும்.

கைநழுவிப் போன வாய்ப்புகள் திரும்ப கைக்கு வந்துசேரும். உடன்பிறந்தோரின் வழியில் பாசம் அதிகரிக்கும். குடும்பத்துடன் தீர்த்த யாத்திரை சென்று வருவீர்கள். சுறுசுறுப்பாகச் செயல்பட்டு கடந்தகால மாபெரும் இழப்புகள் அனைத்தும் சரிக்கட்டும் காலமாக இது அமையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலையில் இருந்துவந்த பளு குறையும். இருப்பினும் திட்டமிட்டு வேலைகளை முன்கூட்டியே செய்யவும். இந்த காலகட்டத்தில் சற்று கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். அலுவலக ரீதியான பயணங்களைச் செய்வீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். மற்றபடி மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து முக்கியமான கோரிக்கையை நிறைவேற்றிக்கொள்வீர்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு..

வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். கடுமையாக உழைத்து எதிர்பார்த்த வருமானத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளையும் புகுத்துவீர்கள். இருப்பினும் வண்டி, வாகனங்களுக்கும் சிறிது பராமரிப்புச் செலவுகளையும் செய்ய நேரிடும். மற்றபடி நண்பர்கள், கூட்டாளிகள் உங்களுக்குப் பக்கபலமாகவே இருப்பார்கள்.

விவசாயிகளுக்கு..

விளைச்சலில் இருந்த சிக்கல்கள் மறைந்து மகசூல் எதிர்பார்த்தபடி இருக்கும். செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை இடையிடையே பயிர் செய்து லாபத்தைப் பெருகிக்கொள்ளவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாகவே முடியும். புதிய பூமி வாங்கும் யோகம் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சி அனுகூலமான திருப்பங்களை ஏற்படுத்தும். எதிரிகளின் தொல்லை வராது என்றாலும் கவனமாக இருக்கவும். அதோடு பேசும் நேரத்தில் எச்சரிக்கையுடன் ஜாக்கிரதையாகவும் பேசவும். குறிப்பாக மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.

கலைத்துறையினருக்கு..

திறமைகள் பளிச்சிடும். உங்களின் படைப்புகள் மக்களிடம் சரியான முறையில் சென்றடைந்து வரவேற்புகளைப் பெறும். உங்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் கைநழுவிப்போன ஒப்பந்தங்கள் மீண்டும் உங்களைத் தேடி வரும்.

பெண்மணிகளுக்கு..

இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். தடைபட்டுவந்து திருமணம் சிறப்பாக நடந்தேறும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் உண்டாகும். அதே நேரம் குடும்ப சொத்து விஷயங்களில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாக வாய்ப்பில்லை. உங்கள் கருத்துகளை ரகசியமாக வைத்துக்கொள்வது நல்லது. மற்றபடி கணவர் தேவையான ஒத்துழைப்பைக் கொடுப்பார்.

மாணவமணிகளுக்கு..

வம்புகளிலும், வீண் பேச்சுகளிலும் கலந்துகொள்ள வேண்டாம். தவறுகளைத் திருத்திக்கொண்டு புத்துணர்ச்சியுடன் பாடங்களைப் படியுங்கள்.

பரிகாரம்: மாதம்தோறும் வரும் ஏகாதசியில் விரதம் இருந்து துளசியால் மகாவிஷ்ணுவைப் பூஜித்துவரச் சகல நன்மைகளையும் பெறுவீர்கள்.


 

தூய்மையான இதயம் கொண்ட துலா ராசி அன்பர்களே!

இதுவரை தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குமேல் தைரிய வீரிய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கின்றார். முயற்சிக்கு ஏற்ப பல முன்னேற்றங்களைக் காணப்போகிறீர்கள்.

வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். பணத்தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பில்லை. முகத்தில் பொலிவும், நடையில் ஒருவித மிடுக்கும் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றம் சிறப்படையும். குழந்தையில்லாதவர்களுக்கு புத்திரப்பேறு பாக்கியம் கிடைக்கும். சமுதாயத்தில் நல்ல கௌரவம், அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள்.

பகையும், பிரச்னைகளும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியங்கள் கிடைக்கும். தெய்வ சிந்தனை அதிகரித்து ஆன்மீகத்தில் பெருமளவு ஈடுபாடு உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் ஆடம்பரமான வீட்டிற்கு மாற்றம் செய்வார்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். யோகா, பிராணாயாமம் போன்றவைகள் செய்து உடல்நலம் மனவளம் ஆகியவற்றை மேம்படுத்திக் கொள்வீர்கள். நெருங்கிய உறவினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். குடும்பத்துடன் குலதெய்வப் பிரார்த்தனை செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

தடைப்பட்டிருந்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடுவீர்கள். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் நடந்துகொள்வீர்கள். பதவி உயர்வு பெறுவதற்கான அறிகுறிகளும் தென்படும். அதேநேரம் சக ஊழியர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

வியாபாரிகளுக்கு..

இந்த காலகட்டத்தில் தங்கள் பொருட்களை புதிய சந்தைகளில் விற்க முயற்சி செய்வார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும். புதிய வர்த்தகம் செய்யும் எண்ணம் மேலோங்கும். அதேநேரம் அதைத் தீவிரமாக ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். தடைகளைச் சமாளிக்கும் தைரியம் உண்டாகும். வீண் கடன்களை வாங்கி சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

விவசாயிகளுக்கு..

தோட்டம் தோப்பு உள்ளிட்ட பணிகள் அனைத்தும் சுமுகமாக முடியும். விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். இதனால் பழைய குத்தகை பாக்கிகளையும் அடைப்பீர்கள். உங்களின் வருமானத்தைக் கூறுபோட நினைக்கும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவும்.

அரசியல்வாதிகளுக்கு..

திறமையாகப் பேசி மற்றவர்களைக் கவருவீர்கள். பொறுப்புகளைச் சரியாக உணர்ந்து செயல்படுத்துவார்கள். முக்கிய பிரச்னைகளுக்குக்காகப் போராடும் போது தன்னிச்சையாகச் செயல்படாமல் கட்சி மேலிடத்தின் சம்மதத்துடன் செயல்படுத்துங்கள். மற்றபடி இந்த குருப்பெயர்ச்சியில் தொண்டர்களின் ஆதரவு உங்களுக்கு நல்லமுறையில் இருக்கும்.

கலைத்துறையினருக்கு..

புதிய ஒப்பந்தங்களால் மனநிம்மதி அடைவீர்கள், வருமானமும் நன்றாக இருக்கும். புதிய நண்பர்களின் மூலம் அனுகூலங்கள் கிடைக்கும். ரசிகர்களின் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுவீர்கள்.

பெண்மணிகளுக்கு..

குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும் உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். கணவரிடம் நிலவிவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். இந்தக் குருப்பெயர்ச்சியில் பணவரவு சீராகும். சிக்கனமாக இருந்து வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

மாணவமணிகளுக்கு..

இந்தாண்டு படிப்பில் முதலிடத்திற்கு வருவார்கள். பெற்றோர்களுக்குப் பெருமை சேர்ப்பீர்கள். விரும்பிய துறையில் முன்னேறலாம்.

பரிகாரம்: திங்கட்கிழமைதோறும் சிவபெருமானுக்கு வில்வ இலைகள் சாத்தி வழிபட்டு வர மனதில் தன்னம்பிக்கையும், மகிழ்ச்சியும் உண்டாகும்.


 

எந்த விஷயத்திலும் ஆராய்ந்து முடிவெடுக்கும் விருச்சிக ராசி அன்பர்களே!

கடந்த 6 வருடங்களாக குடும்பத்தில் நெருக்கடி, கணவன் மனைவி பிரச்னை, தொழிலில் விருத்தியின்மை, மன உளைச்சல் எனப் பல போராட்டங்களை சந்திந்துவந்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குருப்பெயர்ச்சி மிகப் பெரிய திருப்புமுனையாக அமையப்போகிறது.

இதுவரை உங்களின் ராசிக்கு ஜென்ம ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் தற்போது பெயர்ச்சியாகி குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி பெறுகிறார். 2ம் இடத்தில் வருகைதரும் குருபகவான் குடும்ப சுகஸ்தானத்தில் வருகிறார். இதனால் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் விலகப்போகிறது. உங்கள் பேச்சிக்கு மரியாதை அதிகரிக்கும்.

புதிய நபர்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மனதிற்கு இதமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனையில் யோகம் உண்டாகும். வீடு கட்டுதல், இடம் வாங்குதல் போன்றவை சிறப்பாக அமையும். திடீர் யோகம், திடீர் அதிர்ஷ்டம் உங்களைத் தேடிவரும் காலகட்டமிது.

தொழில் ஸ்தானத்தில் இருந்த மந்தநிலை மாறும். போட்டிகளை சாதுரியமாகச் சமாளித்து வெற்றிபெறுவீர்கள். முற்றுப்பெறாமல் நீடித்துக்கொண்டிருந்த காரியங்கள் முடிவுக்கு வரும். நோய் எதிர்ப்பு குறைவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிலிருந்து விலகிவிடுவார்கள். மனத் தடுமாற்றங்கள் நீங்கிவிடும். முகத்தில் ஒளி இழந்து காணப்பட்டவர்கள் புதிய பொலிவுறுவார்கள். சிந்தனைகளைச் செயலாக்கி வெற்றி பெறுவீர்கள்.

தவனை முறையில் இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கியவர்கள், ரொக்கமாகக் கொடுத்து வாங்கும் அளவுக்குப் பொருளாதாரத்தில் உயர்வைக் காண்பார்கள். வேதனையும், சோதனையும் தீர்ந்து வாழ்க்கையில் உயர்வைக் காணப்போகிறீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் குடும்பத்தில் நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். கடந்த ஆறு வருடமாக எதையெல்லாம் இழந்தீர்களோ அதையெல்லாம் இந்த குருப்பெயர்ச்சியில் பெறப்போகிறீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலைகளில் அனுபவம் இல்லாமையால் உங்கள் வேலைகளைக் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கச் சிரமப்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் சற்று விட்டுக்கொடுத்து அனுசரித்துப் போகவும். உங்கள் முயற்சிகளைச் சற்று தீவிரப்படுத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். விரும்பிய இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வியாபாரிகளுக்கு..

கூட்டாளிகளுடன் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் நடந்துகொள்ளுங்கள் மற்றபடி போட்டியாளர்களின் தொல்லைகள் இருக்காது. அதோடு தொழில் ரகசியங்களையும் நீங்கள் அறிய வாய்ப்புகள் உண்டாகும். இந்தக் குருப்பெயர்ச்சியினால் கொடுக்கல், வாங்கலில் படிப்படியான முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு..

முயற்சிகளின் அளவுகளுக்கேற்ப லாபம் கிடைக்கும். விளைச்சலும் சிறிது குறைவாகவே இருக்கும். அதேநேரம் நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். கால்நடைகளால் அனுகூலங்கள் உண்டாகும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மாற்றுப் பயிர்களை ஊடு பயிராகப் பயிரிடவும். புதிய குத்தகைகளை இந்தக் காலங்களில் எடுக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். யுக்தியுடன் செயல்படுவீர்கள். கட்சி மேலிடம் உங்களிடம் கருணையுடன் நடந்துகொள்ளும். அதோடு புதிய பொறுப்புகளையும் கொடுத்து உங்கள் திறமையைச் சோதிக்கும் அதனால் எச்சரிக்கை உணர்வுடன் பணியாற்றி நற்பெயரைச் சம்பாதிக்கவும்.

கலைத்துறையினருக்கு..

புதிய ஒப்பந்தங்களை நன்கு ஆலோசித்தபின்னரே செயல்படுத்தவும். உங்களின் சொற்கள் சில நேரங்களில் விமர்சனங்களுக்கு ஆளாகும். எவரிடமும் வெளிப்படையாகப் பழகவேண்டாம். மேலும், வேலையில் ஒழுங்கு முறையைக் கடைப்பிடிக்கவும். கலைப்பயணங்களைச் செய்து நல்ல வருமானத்தையும் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு..

சிலநேரங்களில் மனக்குழப்பங்களும், கவலைகளும் உண்டாகலாம். அதேசமயம் உடனுக்குடன் அவற்றிலிருந்து விடுபடுவீர்கள். மனதை ஆன்மிகத்தில் செலுத்துவீர்கள். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை அடைவீர்கள். எதிர்பார்த்த கடன்களும் கிடைக்கும். எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும்.

மாணவமணிகளுக்கு..

படிப்பில் முழுமையாக ஈடுபடவும். உங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உடனுக்குடன் பலனளிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமைதோறும் முருகப்பெருமானைத் தரிசித்து வருவதன் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் நினைத்தபடியே நிறைவேறும்.


 

மற்றவர்களுக்குத் தயக்கமின்றி உதவும் எண்ணம் கொண்ட தனுசு ராசி அன்பர்களே!

நல்லது நடக்காதா என்று எதிர்பார்த்துக் காத்திருந்த ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று என்றே சொல்லலாம். கடந்த மூன்றரை வருடமாக பார்க்காத நெருக்கடி இல்லை, படாத போராட்டமில்லை, அடையாத சித்ரவதையில்லை என்றே சொல்லலாம். ஏழரை நாட்டுச் சனியில் எதிர்நீச்சல் போட்டவர்களில் முக்கிய ராசி தனுசு ராசி.

இதுவரை உங்களின் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் இனி உங்கள் ராசியிலேயே ஆட்சி பெறுகிறார். ஏழரைச் சனியின் கடுமையான பாதிப்புகள் குறையும். குழப்பமான நிலையிலிருந்து தெளிந்து, நிலையாக நின்று வெற்றிக்கொடியை நிலைநாட்டப் போகிறார்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.

கடந்த காலங்களில் இருந்துவந்த மிகப்பெரிய மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தடைகள் விலகும். சனியும் கேதும் பல நெருக்கடிகளையும், கஷ்டங்களையும், உடல் நலத்தில் மிகப்பெரிய பயத்தையும் ஏற்படுத்திவந்தது. அப்படிப்பட்ட எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு விடிவுகாலமாகவும், மீண்டுவரும் குருப்பெயர்ச்சியாகவும் இது அமையப்போகிறது.

குடும்பத்தில் இருந்துவந்த பல்வேறு நெருக்கடிகள் நீங்கும். உங்கள் வார்த்தை மதிப்பு அதிகரிக்கும். பொருளாதார விஷயங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

புது உத்வேகம் பிறக்கும். தைரியம் ஏற்படும். தெளிவாக எதையும் யோசித்து செயல்படுத்துவீர்கள். வீடு, மனை, சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் முறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்தவிதமான முயற்சிகள் செய்தாலும் அது வெற்றிபெறும். வண்டி, வாகன சேர்க்கை உண்டாகும்.

கடுமையாக உழைத்துப் பொருளீட்டுவீர்கள். புத்தி சாதூர்யத்துடன் நடந்துகொண்டு சேமிப்புகள் உயர்த்திக்கொள்வீர்கள். உங்கள் உழைப்புக்கு இரண்டு மடங்கு பலன் கிடைக்கும். சிலருக்கு அதிகாரம் செய்யும் பதவிகள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகள் தானாகவே உங்களைத் தேடிவரும். இல்லத்தில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நிறைவேறும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சி காலங்களில் சுணக்கத்திற்கும், சோம்பேறித் தனத்திற்கும் இடம் தராது பணியாற்றினால் மேலதிகாரிகளின் கிடுக்குப்பிடியிலிருந்து தப்பிக்கலாம். உங்கள் பேச்சில் நிதானம் இருக்கப் பழகிக்கொண்டு சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். மற்றபடி உழைப்பிற்கு இரட்டிப்பாக வருமானத்தைப் பெறுவீர்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கும்.

வியாபாரிகளுக்கு..

உங்களைத் தேடி வரவேண்டிய பணம் வந்துசேரும். மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தை மேலும் பெருக்குவீர்கள். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண முயற்சி எடுப்பீர்கள். வாடிக்கையாளர்கள் உங்கள் கடையை நோக்கி வருவார்கள். திட்டமிட்ட வேலைகளை உடனே செய்து முடிக்கவும். கூட்டாளிகளின் ஆலோசனைகயின் பேரில் புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

விவசாயிகளுக்கு..

விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதல் லாபங்களும் சிறப்பாக அமையும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். புதிய குத்தகைகளையும் பெறுவீர்கள். கடன்களுக்கு அரசு மானியங்களும் கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் மக்கள் நலப் பணிகளில் கவனத்துடன் செயல்படுவார்கள். உங்கள் புகழும், செல்வாக்கும் அதிகரிக்கும். புதிய தொண்டர்களைக் கட்சியில் சேர்ப்பீர்கள். எதிரிகளின் நடவடிக்கைகளுக்குச் சாதுரியமாகச் செயல்பட்டு பதிலடி கொடுத்து அதிலிருந்து விடுபடுவீர்கள்.

கலைத்துறையினருக்கு..

வரவுக்கேற்ற புகழும், கௌரவமும் உண்டாகும். பண வரவில் படிப்படியான உயர்வினைக் காண்பீர்கள். நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். சில விரயங்களும் அவ்வப்போது உண்டாகும்.

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியால் குடும்பத்தில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளால், மகிழ்ச்சி அடைவீர்கள். வருமானமும் சீராகவே தொடரும். அதேநேரம் மனதில் காரணமில்லாத குழப்பங்கள் நிலவும். மனதை ஆன்மீகத்திலும், இறைவழிபாட்டிலும் செலுத்துங்கள். கணவரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.

மாணவமணிகளுக்கு..

உழைத்தால் அதற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: வளர்பிறை மற்றும் தேய்பிறை நாட்களில் வரும் பிரதோஷம் அன்று சிவபெருமானை வழிபட்டு வருவதன் மூலம் நன்மை உண்டாகும்.


 

மன உறுதி அதிகம் கொண்ட மகர ராசி அன்பர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான் பெயர்ச்சியாகி அயன, சயன போக ஸ்தானத்தில் ஆட்சி பெற இருக்கிறார்.

உங்கள் அறிவும், துணிச்சலும் கூடும். எதிர்ப்புகளை முறியடிப்பீர்கள். தீவிர முயற்சியின் பேரில் கடினமான செயல்களையும் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த பலன்களும் கிடைக்கும். குழந்தைகள் விஷயத்தில் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தோரின் ஆதரவு கிடைக்கும்.

கொடுத்த கடன் தாமதமாக கைக்கு வந்துசேரும். அனைவரிடமும் நியாயமாக நடந்துகொள்வீர்கள். முன்கோபத்தை விட்டொழித்து அனைவரிடமும் சகஜமாகப் பழகுவீர்கள். நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக்கொள்வீர்கள். கடுமையாக உழைக்கவேண்டி வரும். சமுதாயத்தில் உயர்ந்த பொறுப்புகளையும் பெறுவீர்கள்.

புதிய முதலீடு செய்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் மறையப்போகிறது. புதுவிதமான விஷயங்களுக்குச் செயல்வடிவம் கொடுப்பீர்கள். ஜாதகப்படி வெளிநாடு செல்லும் யோகங்கள் உண்டாகும்.

12ல் குருபகவான் வருவதால் 50 சதவீத பலன்களை மட்டுமே இந்த ராசிக்காரர்கள் எதிர்பார்க்க முடியும். ஏழரை நாட்டுச் சனி நடைபெற்று வருவதால் அனைத்து விஷயங்களையும் சற்று கவனத்துடன் கையாளுவது நன்மையைத் தரும். கருத்து வேறுபாடு, வம்பு, சண்டை, சச்சரவு போன்ற தேவையற்ற பிரச்னைகளில் தலையிடாமல் தவிர்ப்பது நல்லது.

முடங்கிய செயல்களும் மடமடவென்று நடக்கத் தொடங்கும். பங்குவர்த்தகத்தில் லாபம் காண்பீர்கள். பெற்றோர்கள் வழியிலிருந்த சுணக்கங்கள் மறைந்து குடும்பத்துடன் இணைந்து வாழ்வீர்கள். திருமணமாகாதவர்களுக்குத் திருமணமும், புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திர பாக்கியமும் உண்டாகும். சிலர் இருக்கும் வீட்டைப் புதுப்பிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

வேலையில் சுமை அதிகரித்தாலும் அவைகளை முடிக்க மனதில் உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். மற்றபடி உழைப்புக்கேற்ற வருமானம் வந்துகொண்டிருக்கும். உங்களை உதாசீனப்படுத்தும் சக ஊழியர்களைக் கண்டுகொள்ள வேண்டாம். வேலை விஷயமாக வெளியூர் பயணங்களை இந்த காலகட்டத்தில் செய்வீர்கள்.

வியாபாரிகளுக்கு..

விற்பனை விறுவிறுப்பாக நடக்கக் காண்பார்கள். கூடுதலாக உழைத்து மனஉறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். நண்பர்களை கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

விவசாயிகளுக்கு..

இந்தக் கால கட்டத்தில் விளைச்சல்கள் அதிகமாக இருக்கும் நீர்வரத்தும் அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளை மேம்படுத்துவீர்கள். கூடுதல் வருமானத்திற்கான காய்கறிகள், கிழங்குகள் எனப் பயிர்செய்து பயன் பெறுங்கள். அதே நேரம் திட்டமிட்ட செயல்களில் சிறு சிறு தடை ஏற்பட்டு பிறகு முடியும். அதனால் புதிய கடன்களை இந்தக் குருப்பெயர்ச்சியில் வாங்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு..

பெயரும், புகழும் அதிகரித்தாலும் உட்கட்சி விவகாரங்களில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதனால் அனாவசிய வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இருப்பினும் போராட்டங்களில் புதிய உத்வேகத்துடன் ஈடுபடுவீர்கள். உங்கள் பொறுப்புகளைத் திட்டமிட்டுச் சரியாகச் செயல்படுத்து நல்லது.

கலைத்துறையினருக்கு..

இந்தக் காலகட்டத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். உங்களின் தனித்திறமையால் உங்களில் செயல்களில் முத்திரையைப் பதிப்பீர்கள். சமுதாயத்தில் மதிப்பு, செல்வாக்கு உயரும். சக கலைஞர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு ஓரளவு உதவுவார்கள். வருமானத்திற்கு இந்தக்குருப்பெயர்ச்சியில் எந்தக் குறையும் வராது.

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் படிப்பில் அதிக மதிப்பெண்களை அள்ளுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பையும் பெறுவார்கள்.

பரிகாரம்: திருநள்ளாறு சென்று சனிபகவானைத் தரிசனம் செய்துவர எண்ணிய காரியங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.


 

குணம் மிகுந்த கும்ப ராசி அன்பர்களே!

இதுவரை ஜீவன ஸ்தானமான பத்தாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இதற்குப் பிறகு லாபஸ்தானமான பதினொன்றாம் இடத்திலிருந்து பலவிதமான நன்மைகளைத் தர இருக்கின்றார். எதிர்பார்த்த ஆதரவுகள் கிடைக்கும். மறைந்து இருந்த திறமைகளை வெளிப்படுத்தி லாபகரமான வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.

குழப்பங்களிலிருந்து விடுபட்டு சுலபமாக முடிவெடுப்பீர்கள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். தான் உண்டு தன் வேலை உண்டு என்று கவனமாகச் செயல்களைச் செய்து புகழடைவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்திகள் வரும். அசையும், அசையா சொத்து சேர்க்கையும் உண்டாகும். தள்ளிப்போன திருமணம் உடனடியாகக் கைகூடும்.

உங்களுக்கு உத்தரவாதம் கொடுத்தவர்கள் சிறிது தயக்கத்துடன் நிறைவேற்றுவார்கள். மனதில் இனம்புரியாத பயம் தொடரும். பெரியோர்களை மதித்து அவர்களின் ஆதாரவையும் பெறுவீர்கள். செய்தொழிலில் இருந்த பிரச்னைகள் அகலும். வழக்குகளால் சாதகமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பில்லாததால் பொறுமையுடன் அமைதி காக்கவும்.

புத்திரபாக்கியத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மழலை பாக்கியம் கிடைக்கும். பொருளாதாரம் ஏற்றமாகவே அமையும். புதிய லாபம் தரும் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி குதூகலம் நிறையும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். நெருக்கடிகள், பிரச்னைகள் ஏதுமின்றி ராஜபாட்டையில் நடைபோடும் காலகட்டமிது.

உத்தியோகஸ்தர்களுக்கு..
இந்தக் குருப்பெயர்ச்சியில் புதிய முயற்சிகள் கைகூடும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்கள் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். அலுவலகத்தில் உங்கள் மீது நடந்த வழக்குகள் முடிவடைந்து, மறுபடியும் பழைய பதவிகளைப் பெறுவீர்கள். மற்றபடி கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றுவீர்கள்.

வியாபாரிகள்..

கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பார்கள். உங்களின் பேச்சுத்திறனால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். வியாபாரத்திலிருந்த தடைகளும், எதிர்ப்புகளும் இந்தக் காலகட்டத்தில் நீங்கக் காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் ஒற்றுமையைக் காண்பீர்கள்.

விவசாயிகளுக்கு..

புதிய சாதனங்களை வாங்கி வியாபாரத்தை விரிவுபடுத்துவார்கள். கடன் பிரச்னைகள் திடீரென்று ஏற்பட்டாலும், அவைகளை சாதுரியத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

அரசியல்வாதிகளுக்கு..

புதிய முயற்சிகளில் தங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். கட்சி மேலிடம் உங்களின் சிறப்பான திறனைக் கவனிப்பார்கள். அதனால் புதிய பொறுப்புகளைக் கொடுத்துக் கௌரவப்படுத்தும். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் உழைப்பீர்கள். தொண்டர்களும் உங்களுக்கு உதவிக்கரமாக இருப்பார்கள்.

கலைத்துறையினருக்கு..

புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய பாணியில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். சந்தர்ப்பங்களை நழுவவிடாமல் இந்த குருப்பெயர்ச்சியில் நல்ல வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

பெண்மணிகளுக்கு..

இந்த குருப்பெயர்ச்சியில் பெற்றோர் வழியில் பெருமைகள் கூடும். பிள்ளைகளால் பெயரும், புகழும் கிடைக்கும். ஆன்மிகத்திலும், தெய்வீகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். கணவருடனான உறவு சுமுகமாகவே இருக்கும். வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும்.

மாணவமணிகளுக்கு..

இந்தக் காலகட்டத்தில் படிப்பில் அக்கறை நாட்டுவார்கள். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவார்கள். பெற்றோர் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம்: சனீஸ்வர சுவாமியை வழிபட ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.


 

பிரச்னைகளை சுலபமாகக் கையாளும் மீன ராசி அன்பர்களே!

இதுவரை பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தில் இருந்துவந்த குருபகவான் இனிவரும் காலங்களில் ஜீவன ஸ்தானத்திலிருந்து தங்களின் எண்ணத்தை செயல் வடிவமாக மாற்றுவார். தனவரவுகள் சிறப்பாக அமையும். குடும்பத்தில் புதிய உறுப்பினர்களின் வருகையால் குதூகலமும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.

செய்தொழிலில் டென்ஷன் குறைந்து நிம்மதியாகப் பணியாற்றுவீர்கள். நல்ல செய்தியுடன் திருப்பமும் வரும். திருட்டுப்போன பொருட்கள் திரும்ப கைக்கு வந்து சேரும். விலகி இருந்த நண்பர்கள் திரும்ப வந்து சேர்ந்துகொள்வார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்ப பிரச்னைகள் சரியாகும்.

செய்தொழிலை சீர்திருத்தம் செய்து தகுந்த ஆலோசனைகளைப் பெறுவீர்கள். அதேநேரம் எதிர்பாராத விவகாரங்களில் அனாவசியமாகத் தலையிட வேண்டாம். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். லாபம் இரட்டிப்பாகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும் புதிய பொறுப்பு ஒன்று தானாக தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து கௌரவம் வரத்தொடங்கும்.

விடாமுயற்சியும், போராட்ட குணமும் மீன ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே இருக்கும். தலைமைப் பண்பு இவர்களிடம் அதிகமாகவே இருக்கும். மொத்தத்தில் பலவகையான மாற்றங்களைக் குருபகவான் உங்களுக்குத் தரப்போகிறார்.

உங்கள் வார்த்தைக்கு அனைவரும் கட்டுப்படுவார்கள். பணம் சார்ந்த விஷயங்களில் இருந்துவந்த தடைகள் நீங்கும். நண்பர்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருப்பது நல்லது. பழைய வண்டி வாகனங்களை மாற்றுவீர்கள். உடல்நலக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும் காலகட்டமிது.

10ல் குரு வருவதால் நிறையக் கொடுத்தாலும் தேவையில்லாது மன சஞ்சலமும் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக இருப்பது நன்மையைத்தரும். தெய்வ வழிபாடு, நல்ல அனுகூலத்தைத் தரும். புதிய விஷயங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் கடமை தவறாமல் உழைப்பார்கள். மேலதிகாரிகளிடம் உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றிக் கொள்வீர்கள் சக ஊழியர்களும் உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியில் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பத்துடன் இணைவார்கள். அலுவலகத்தில் உங்கள் கௌரவம் உயரக் காண்பீர்கள்.

வியாபாரிகளுக்கு..

கொடுக்கல் வாங்கல் சிறப்பான பலனைக் கொடுக்கும். இந்தக் குருப்பெயர்ச்சி காலத்தில் உங்கள் எண்ணங்கள் செயல்களில் பிரதிபலிக்கும். இதுவரை புதிய துறைகளில் இறங்கப் பயந்தவர்கள் துணிந்து இறங்கி வெற்றிக் கொடி நாட்டுவார்கள். பணத் தட்டுப்பாடும் எதுவும் வராது. கூட்டாளிகளும் முழுமையான ஒத்துழைப்பை நல்குவார்கள்.

விவசாயிகளுக்கு..

தானிய உற்பத்தியில் மகிழ்ச்சிகரமான நிலையைக் காண்பார்கள். இத்துடன் உங்களின் கையிருப்பு பொருட்களுக்கும் சந்தையில் நல்ல விலை கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்யும் விவசாய கூலிகளுக்குத் தேவையானதைச் செய்வீர்கள். புதிய மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து எதிர்பார்க்காத மகசூலைக் காண்பீர்கள். புதிய பூமி வாங்க நினைத்தவர்கள் இந்தக் குருப்பெயர்ச்சியில் வாங்குவீர்.

அரசியல்வாதிகளுக்கு..

புதிய முயற்சிகளில் உழைப்பிற்கேற்ற பலன் பெறுவார்கள். அரசு அதிகாரிகளிடம் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். எதிர்பார்க்கும் நல்ல காரியங்களில் வெற்றி கிடைக்கும். உங்களின் பெயர், புகழ் கூடும். தொண்டர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். உங்களை கவிழ்க்க நினைக்கும் எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் தங்கள் திறமைக்குத் தகுந்த மதிப்பும், அங்கீகாரமும் பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் உங்களை நாடி வருவர். அதேநேரம் ரசிகர்களைக் கௌரவப்படுத்தவும். உங்களை உணர்ந்து செயலாற்றுவீர்கள். சக கலைஞர்களிடமும் உதவிகளைப் பெறுவீர்கள்.

பெண்மணிகளுக்கு..

இந்தக் குருப்பெயர்ச்சியில் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். குடும்பத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். தெய்வ பலத்தைப் பெருக்கிக் கொண்டால் பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்களிடமும் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.

மாணவமணிகளுக்கு..

படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கவும். எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர சகல விதமான ஐஸ்வர்யங்களும் கைகூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here