கோடையில் குளிரையும், குளிர்காலத்தில் வெயிலையும் உணரும் அதிசய மனிதர்!

அரியானா மாநிலம் மகேந்திரகார் பகுதியில் உள்ள தேரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாராம். இவர் மிகவும் வித்தியாசமான பழக்கம் கொண்டவர். கோடை காலத்தில் அனைவரும் குளிரான பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்புவர். ஆனால் இவர் தீ முன் அமர்ந்து குளிர்காய்கிறார். மேலும், போர்வையை போர்த்தி இருக்கிறார்.

அதே போல் குளிர்காலத்தில் வெரும் காட்டன் உடை அணிந்து கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார். வித்தியாசமான பழக்கம் இவர் சிறு வயது முதல் இவ்வாறு இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர். இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மனித உடலானது வெப்பத்தை உருவாக்கி வெளியேற்று கொண்டிருக்கும். கோடைகாலங்களில் உடலில் உள்ள வெப்பமானது விரைவில் வெளியேறாகாது. அதனால் சூடாக உணரப்படுகிறது. அதற்கு எதிர்மறையாக குளிர்காலத்தில் வெப்பம் விரைவாக வெளியேறிவிடும். அதனால் அதிக அளவில் குளிர்கிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here