நன்றி மறக்காத தளபதி… தன்னை வளர்த்து விட்ட கேப்டனுக்கு செய்யும் உதவி

தளபதி விஜய் தன்னை ஏற்றி விட்ட கேப்டன் விஜயகாந்திற்கு நன்றிகடனாக உதவி செய்ய முடிவு செய்துள்ளார்.

விஜயுடைய திரைப்பயணத்தை விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் தொடங்கி வைத்தார். “நாளைய தீர்ப்பு” என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதை தொடர்ந்து, தந்தையின் இயக்கத்திலேயே அதிக படங்களில் நடித்தார். அங்கு ஆரம்பித்த அவரின் திரை வாழ்வு, இன்று மெர்சல் படம் வரை வந்திருக்கிறது.

விஜயின் ஆரம்ப படங்களில் பெரிய நடிகர் நடித்தால் அவரின் திரை வாழ்வில் பெரிய ஏணியாக இருக்கும் என எண்ணிய எஸ்.ஏ.சந்திரசேகர். விஜயின் செந்தூர பாண்டி படத்தில் நடிக்க வேண்டும் என கேப்டன் விஜயகாந்தை அணுகினார். அப்போது, டாப் நாயகனாக இருந்த விஜயகாந்த் எந்த மறுப்பும் சொல்லாமல் நடித்தும் கொடுத்தார். படமும் சூப்பர் ஹிட் அடித்தது.

விஜய் தனக்கு நல்லது செய்தவர்களை பெரிதாக மறக்கமாட்டார். இதை தற்போதும் நிரூபித்து இருக்கிறார். இன்று தான் தளபதியாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் விஜயகாந்த் தான். அவருக்காக கேப்டனின் இரண்டாவது மகன் சண்முக பாண்டியனை வைத்து படத்தை தயாரிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

இதனால், பல இயக்குனர்களிடம் விஜய் கதை கேட்க தொடங்கி இருக்கிறார். விரைவில் கதை கிளிக்கானவுடன் படப்பிடிப்பையும் பரபரப்பாக முடித்து சண்முக பாண்டியனுக்கு ஒரு ப்ரேக் கொடுக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுகள் அடிப்படுகிறது.

 

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here