தவறுக்கு வருந்துகிறோம்!

இன்றைய தினம் தமிழ்பக்கத்தில் “மன்னார் மாவட்டத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பெயர் விபரம்“ என்ற செய்தி வெளியாகியிருந்தது. எனினும், அந்த செய்தியில் தவறிருந்ததால், அது நீக்கப்பட்டுள்ளது.

பட்டதாரகளிற்கான நேர்முகப்பரீட்சையின் போது உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாதவர்களின் பெயர் விபரங்களே இன்றைய தினம் மன்னார் மாவட்ட செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும், பிரதேசசெய்தியாளர் ஒருவரின் தவறினால், தமிழ்பக்க வாசகர்களிற்கு ஏற்பட்ட அசௌகரியங்களிற்கு மனவருத்தத்தை பதிவு செய்கிறோம்.

பிரதேசசெய்தியாளர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும் செய்திகளை முழுமையாக உறுதிசெய்து, செய்தியாக வெளியிடும் பொறிமுறையை தமிழ்பக்கம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. எனினும், இன்றையதினம் தவிர்க்க முடியாமல் ஏற்பட்ட தவறிற்காக வருந்துகிறோம்.

இனிமேல் இப்படியான தவறுகள் ஏற்படாது என்பதையும் வாசகர்களிற்கு உறுதியளிக்கிறோம்.

-ஆசிரியர்-

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here