காதலி கொலை; திருமணமான காதலன் எஸ்கேப்!

0

இளம்பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவரது காதலன் தேடப்பட்டு வருகிறார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய, ஊரகஹ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை பணி நிறைவடைந்து வீட்டிற்கு வராத மகளைப் , பெற்றோர் தேட ஆரம்பித்துள்ளனர். எனினும் குறித்த பெண் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகப் பெற்றோருக்கு தகவல் கிடைத்துள்ளது.

வான் ஒன்றில் வந்த இளைஞனே பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகளினால் வாகனத்தின் இலக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்தமை தெரியவந்ததுடன், குறித்த இளைஞர் வானில் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சந்தேக நபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் நீண்ட காலங்களாக காதல் தொடர்பு இருந்துள்ளது. குறித்த இளைஞன் திருமணமானவர் என தெரிந்த பின்னர் பெண் காதல் தொடர்பை கைவிட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட மோதலே இந்தக் கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here