நாளை யாழிலுள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம்!

யாழிலுள்ள இந்தியத் தூதரகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர் மீனவர் அமைப்புக்கள்.

இன்று யாழில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை விடுத்தனர்.

சீன பிரதமர் தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக, இந்திய கடற்படை பாக்கு நீரிணையில் சரமாரியான கைதுகைள மேற்கொண்டிருந்தது. இந்தியாவிற்குள் ஊடுருவலாமென்ற சந்தேகத்தில், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த சுமார் 18 யாழ்ப்பாண மீனவர்கள் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள மீட்க இராஜதந்திரரீதியிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இது தொடர்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில் கலந்துரையாடியும், காரணமின்றி கைது செய்யப்பட்ட யாழ் மீனவர்கள் 18 பேரும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதனை கண்டித்தும், அவர்களை உடன் விடுவிக்க வலியுறுத்தியும் நாளை, யாழிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக மீனவர் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here