வடக்கு கிழக்கு இணைப்பு, வடக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றத்தை அநுரகுமார ஏற்க மாட்டார்!

வடக்கு கிழக்கு இணைப்பு கோரிக்கைக்கு தேசிய மக்கள் சக்தி எதிரானது. வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோருவதையும் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரிவித்துள்ளார் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்.

தேசிய பாதுகாப்பை உறுதிசெய்யும் பணியாகவே வடக்கில் இராணுவம் நிலைகொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இராணுவம் வடக்கின் மட்டுமின்றி நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முகாம்களை பேணுகிறது. இதனால் ஒரு பகுதியில் இருந்து மட்டும்- வடக்கு- இராணுவத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கைகளை தேசிய மக்கள் சக்தி ஆதரிக்காது.

வடக்கு கிழக்கை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகளுக்கும் தேசிய மக்கள் சக்தி எதிரானது.

வடக்கு கிழக்கை இணைப்பிற்கான அழைப்புகளின் பின்னால் தீவிரவாத நோக்கத்தைக் கொண்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி அதனை எதிர்க்கும் என்றும் அவர் கூறினார்.

தேசிய பிரச்சினையை தேர்தல் உபாயமாக பயன்படுத்தக்கூடாது. தேசிய பிரச்சினை மிகவும் முக்கியமான பிரச்சினை. வாக்குகளை வெல்வதற்காக தேசிய பிரச்சினை தொடர்பாக பேச நாம் தயாரில்லை. தேசிய ஒற்றுமையை உறுதி செய்வதே தேசிய மக்கள் சக்தஜயின் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here