தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின்(நுஜா) வருடாந்த இப்தார்

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (நுஜா) வருடாந்த இப்தார் , ஊடகவியலாளர்களுக்கான அன்பளிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தேசிய தவிசாளர் றியாத் ஏ. மஜீட் தலைமையில் நேற்று முன்தினம் (12) பாலமுனை கஸமாறா ரெஸ்டூரன்டில் இடம்பெற்றது.
இந்த இப்தார் நிகழ்வில் அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எம்.அறூஸ், அமைப்பின் செயலாளர் பைசல் இஸ்மாயில், அரசியல் பிரமுகர்கள், இலக்கியவாதிகள், வைத்தியர்கள், கல்விப் புலத்தின் உயர் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
மார்க்கசொற்பொழிவை மௌலவி என்.எம்.அப்துல் ஹபீல் நிகழ்த்தினார்.
இதன் போது சாய்ந்தமருது முபாறக் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் முபாறக் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்ட பிரயாணப் பை மற்றும் கிப்ட் பவுச்சர் போன்றவைகளை ஊடகவியலாளர்களிற்கு வழங்கப்பட்டன.
Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here