அதிக வட்டி நுண்கடன்கள் இரத்து, சமுர்த்தி கொடுப்பனவு 10,000, நுண்கடன் பாலியல் வன்முறைகள் விசாரணை அநுரவின் பொருளாதார கொள்கை வெளியீடு!

திருகோணமலை எண்ணெய் குதங்களை நவீனப்படுத்தி சர்வதேச எண்ணெய் சேமிப்பிடமாக மாற்றுவதாக மக்கள் தேசிய சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமாரா திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை வெளியீட்டு நிகழ்வு இன்று (21) இடம்பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு-

சப்பகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை புதுப்பிப்பது, பெற்றோலிய பொருட்களிற்கான உலகளாவிய விநியோக மார்க்கத்தில் இலங்கையை முக்கிய அங்கமாக்க, இன்னொரு சுத்திகரிப்பு ஆலை நிறுவப்படும்.

உணவு மற்றும் மருந்துப் போன்ற இறக்குமதி பொருட்களிற்கான வட் வரி நீக்கப்படும்.

உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்த, தேவையற்ற வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்தப்படும்.

நாட்டிலிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் 100 தொழிற்சாலைகளை அமைக்கப்படும். கிளிநொச்சி, அம்பாறை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பால் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

சிறிய, நடுத்தர தொழிற்துறையை மேம்படுத்த தனியான அமைச்சு உருவாக்கப்படும்.

நாடு பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். திருப்பிச் செலுத்தும் பணியை எளிதாக்க சலுகைகள் பெறப்படும்.

இலங்கை ஏர்லைன்ஸ் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சு ஆகியவற்றால் பெறப்பட்ட அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும்.

மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்படாத வட்டி விகிதங்களில் பெறப்பட்ட மைக்ரோ நிதிக் கடன்களுக்கு விலக்கு அளிக்கப்படும். அத்தகைய கடன்களைப் பெற்ற தனிநபர்களின் வட்டித் தொகை செலுத்தப்படும்.

மைக்ரோ நிதிக் கடன்களை திருப்பிச் செலுத்தாத பெண்கள் மீது நடத்தப்பட்ட பாலியல் துஷ்பிரயோக வழக்குகளை விசாரிக்க சிறப்பு ஆணைக்குழு அமைக்கப்படும்.

மாதாந்த சமுர்த்தி கொடுப்பனவு 10,000 ரூபா வரை உயர்த்தப்படும். பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். க.பொ.த சாதாரணதரம், உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களின் குடும்பம் பயனடையும் விதமான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here