காட்சி சார்ந்த தூய்மைக்கேடு மனு மேல் முறையீட்டு நீதி மன்றத்தின் கவனத்தில்

தேர்தல் காலத்தில் சட்ட விரோத காட்சி சார்ந்த தூய்மைக்கேடுகளை தடுக்கும் மனு மேல்முறையீட்டு நிதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது.

தேர்தல் காலத்தில் சட்ட விரோதமாக காட்சி படுத்தப்படும் பதாதைகள், பெனர்கள் மூலமான காட்சி சார்ந்த தூய்மைக்கேடுகளை (Visual Pollution) தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்காகன உத்தரவை அதிகாரிகளுக்கு விடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி கவனத்தில் கொள்வதற்கு மேல்முறையீட்டு நீதி மன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மனு இன்றைய தினம் மேல் முறையீட்டு நீதி அரசர்களான ஜனத் டி சில்வா,நிஷங்க பந்துல கருணாரத்ன ஆகியோர் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆலோசனையை பெற்றுக்கொள்வதற்கு இதன்போது சட்டமா அதிபர் கால அவகாசம் கோரினார். இந்த ரிட் மனுவை சுற்றாடலுக்கான நீதி கேந்திர நிலையம் தாக்கம் செய்துள்ளது.

இதற்கு முன்னர் மேல் மறையீட்டு நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனுவின் உத்தரவிற்கு அமைய சுற்றாடல் அதிகார சபையினால் தேர்தல் காலங்களில் மேற்கொள்ளப்படும் காட்சி சார்ந்த தூய்மைக்கேட்டை தடுப்பதற்கு தேவையான சட்ட விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இவை தற்பொழுது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்துள்ளார். இதற்கு அமைவாக தேர்தல் பதாதை மற்றும் பெனர்கள் ஆகியவற்றினால் ஏற்படும் காட்சி சார்ந்த தூய்மைக்கேட்டை தடுப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் இதுவரையில் முடியாதிருப்பதாக மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த அதிகார சபையின் மூலம் சம்பந்தப்பட்ட சட்ட விதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தரவொன்றை விடுக்குமாறு மனுதாரர் மேன் முறையீட்டு நீதி மன்றத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here