எனக்கு மிரட்டல் வருகிறது; பாதுகாப்பு தருகிறார்களில்லை: சிவாஜி ஆதங்கம்!

தனக்கு கைத்தொலைபேசி மூலம் தொடர்ந்து மிரட்டல் விடுக்கப்பட்டு வருவதாகவும், பாதுகாப்பு வழங்கும்படி கோரிக்கை விடுத்தும் இதுவரை பாதுகாப்பு வழங்கப்படவில்லையென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கம்.

நேற்று (20) மட்டக்களப்பிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இதன்போது வாழைச்சேனை பல நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனக்கு இதுவரைக்கும் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தும் எது விதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் இடம்பெற்று வருகிறது. போட்டியிடும் 35 வேட்பாளர்களுக்கும் பாராபட்சமின்றி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.

கட்டுப்பணம் செலுத்திய நேரம் முதல் தமக்கு கைத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகவும் அதனைத் தொடர்ந்து தமது கைத்தொலைபேசியினை சிறிது நாட்கள் நிறுத்தி வைத்திருந்தாகவும் தெரிவித்தார்.

சிங்கள பௌத்த தேசம் சிங்கள பௌத்த பேரினவாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமே தவிர சிறுபான்மையினருக்கு வழங்காது. எதிர்வரும் செவ்வாய் கிழமையன்று வேட்பாளர்களுக்கான சந்திப்பொன்று தேர்தல் ஆணைக்குழு தவிசாளரினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அச் சந்திப்பில் குறித்த விடயம் தொடர்பாக தெளிபடுத்தவுள்ளேன்.

அடுத்தகட்டமாக 23ம் திகதி எனது எதிர்கால அரசியல் நகர்வு தொடர்பாக என்ன செய்யப் போகின்றேன் என்பதனை ஊடகங்களுக்கு அறிவிக்கவுள்ளேன் என்று மேலும் அவர் கருத்து வெளியிட்டார்.

இதன்போது வடமாகான முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரனும் பிரசன்னமாயிருந்தார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here