வடக்கில் நான்கு அதி சிறப்பு சிகிச்சை பிரிவுகள்: ஒப்பந்தம் கைச்சாத்தானது!

மாங்குளம் வைத்தியசாலையின் சிறப்பு சிகிச்சை திட்ட கட்டிட மாதிரி

யாழ்ப்­பா­ணம், கிளி­நொச்சி, மாங்­கு­ளம், வவு­னியா ஆகிய இடங்­க­ளில் நான்கு அதி    ­சி­றப்பு சிகிச்­சைப் பிரி­வு­கள் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்­தப் பணி­கள் நெதர்­லாந்து அர­சின் 60 மில்­லி­யன் யூரோ நிதி உத­வி­யில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

யாழ்ப்­பா­ணம், பரு­த்தித்­துறை ஆதார வைத்­தி­ய­சா­லை­யில் சிறப்பு சத்­தி­ர­சி­கிச்­சைப் பிரி­வும், கிளி­நொச்சி மாவட்ட வைத்­தி­ய­சா­லை­யில் சிறப்பு தாய் சேய் நலப் பிரி­வு மற்றும் சிறப்பு விபத்து சிகிச்சைப் பிரிவும், மாங்­கு­ளத்­தில் மருத்­துவ புனர்­வாழ்வு வைத்­தி­ய­சா­லை­யும், வவு­னி­யா­வில் இரு­தய மற்­றும் சிறு­நீ­ரக சிறப்பு சிகிச்­சைப் பிரி­வும் அமைக்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த ஆண்டு இறு­தி­யில் இதற்­கான பணி­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு மூன்று ஆண்­டு­க­ளுக்­குள் முழு­மைப்­ப­டுத்­தும்.

2016ஆம் ஆண்டு வடக்கு மாகா­ணத்­துக்­கான நீண்­ட­கால சுகா­தா­ரத் திட்­டம் தயா­ரிக்­கப்­பட்­டு, வடக்கு மாகாண அமைச்­ச­ரவை அனு­மதியை பெற்றது. அதையடுத்து, மத்திய  சுகா­தார அமைச்­சுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டது. அவர்­க­ளது அனு­ம­தி­யு­டன், இலங்கை தேசிய திட்­ட­மி­டல் அமைச்­சின் ஊடாக அமைச்­ச­ர­வைக்கு சமர்­பிக்­கப்­பட்டு அமைச்­ச­ர­வை­யின் அனு­ம­தி­யும் பெறப்­பட்டு இந்­தத் திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது.

இந்­தத் திட்­டத்­துக்கு ஒஸ்­ரிய அரசு மற்­றும் நெதர்­லாந்து அரசு ஆகி­யன நிதி உதவி வழங்­கு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. இரண்டு அர­சு­க­ளி­னது நிதி­யைப் பெற்று வாமிட் என்ற நிறு­வ­னம் அபி­வி­ருத்­திப் பணி­களை முன்­னெ­டுக்­கும் என்று கூறப்­பட்­டி­ருந்­தது. இதற்கு அமை­வாக, அந்த நிறு­வ­னப் பிர­தி­நி­தி­கள் வடக்­குக்கு வருகை தந்து நில­மை­களை நேரில் ஆய்வு செய்­தி­ருந்­த­னர்.

ஆரம்­பத்­தில் மன்­னார் மாவட்­ட­மும் இந்­தத் திட்­டத்­துக்­குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருந்­தது. எனி­னும் 60 மில்­லி­யன் யூரோ நிதிக்­குள், மன்­னார் மாவட்­டத்­தில் சிறப்பு சிகிச்­சைப் பிரிவை அமைக்க முடி­யாது. இத­னால் மன்­னார் மாவட்­டம் நீக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது, மன்­னார் மாவட்­டத்­துக்கு மேல­திக நிதி பெறும் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தில் பரு­தித்­துறை ஆதார வைத்­தி­ய­சாலை வளா­கத்­தி­னுள்ளே தனி­யான பிரி­வா­கவே சத்­திர சிகிச்­சைப் பிரிவு அமைக்­கப்­ப­டும். கிளி­நொச்சி மற்­றும் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­க­ளில் தற்­போ­துள்ள கட்­டி­டங்­களே அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு தனி­யான சிறப்பு சிகிச்­சைப் பிரிவு செயற்­பட ஆரம்­பிக்கும்.

கிளிநொச்சி சிறப்பு சிகிச்சை திட்ட கட்டிட மாதிரி
பருத்தித்துறை வைத்தியசாலை சிறப்பு சிகிச்சை திட்ட கட்டிட மாதிரி

மாங்­கு­ளத்­தில் உள்ள வைத்­தி­ய­சாலை முற்று முழு­தாக ஆதார வைத்­தி­ய­சா­லைக்­கு­ரிய வச­தி­க­ளு­டன் மாற்­றம் செய்­யப்­பட்டு மருத்­துவ புனர்­வாழ்வு வைத்­தி­ய­சா­லைக்­கு­ரிய சிறப்­புப் பிரி­வு­க­ளும் ஆரம்­பிக்­கப்­பட்டு செயற்­ப­டுத்­தப்­ப­டும். வடக்­கி­லுள்ள 42 ஆயி­ரம் சிறப்­புத் தேவை­யு­டை­யோ­ருக்கு இந்த வைத்­தி­ய­சாலை உத­வி­யாக அமை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here