கடவுளுக்கு உருவம் கொடுத்த ஆராய்ச்சியாளர்கள்!

0

கடவுள் எப்படி இருப்பார்?, கடவுளின் குணம் எப்படிப்பட்டது? கடவுள் எந்த வண்ணம் கொண்டவர்?  இப்படி பல கேள்விகள் உலகம் முழுவதும் காலகாலமாக மனிதர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், புதிய ஆய்வு ஒன்றில் கடவுள் பெண்ணின் அம்சங்களைக் கொண்ட ஒரு இளமையான முகத்துடன் இருப்பார் என கூறப்படுகிறது.

வட கரோலினாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் வினோதமான ஆய்வு ஒன்றை நடத்தினர். ஆய்வு முடிவு சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. வேதாகம பதிவுகளிலிருந்து ஒரு பழைய மனிதராக தோற்றத்தை புரிந்து வைத்திருந்தார்கள். ஆனால் இப்பொழுது இளம் வயதினரைப் போல் கடவுளைப் புரிந்துகொள்வதை ஆய்வு உறுதசெய்கிறது.

சேப்பல் ஹில்லில் உள்ள வட கரோலினா பல்கலைக்கழகத்தில் உளவியலாளர்கள் குழு 511 அமெரிக்க கிறிஸ்தவர்களின் உதவியுடன் இந்த ஓவியத்தை உருவாக்கியது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள்  நூற்றுக்கணக்கான தோற்றமளிக்கும் முகம்-ஜோடியைப் பார்த்து, ஒவ்வொரு ஜோடியிலிருந்தும் முகத்தைத் தேர்வு செய்தனர்.

தேர்ந்தெடுத்த முகங்களை இணைப்பதன் மூலம், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் கடவுளை எவ்வாறு தோற்றமளிக்க நினைத்தார்கள் என்பதைப் பிரதிபலிக்கும் ஒரு கலப்பு ‘கடவுளின் முகத்தை’ கொண்டு வந்தார்கள். அவர்களின் முடிவு ஆச்சரியம் வெளிப்படுத்தும் விதமாக இருந்தது. ஆய்வின் முழுமையான முடிவுகள் PLOS பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here