கசிப்பு குடித்துவிட்டு மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!

நண்பனுடன் சேர்ந்து கசிப்பு குடித்த கணவன் போதை தலைக்கேறிய நிலையில் தனது மனைவியையே தீவைத்து கொலை செய்துள்ளார். இது விசுவமடு தேராவில் பகுதியில் நடந்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயான 23 வயதான இளம் பெண்ணே உயிரிழந்துள்ளார்.

கடந்த 5ம் திகதி உயிரிழந்த இந்த பெண்ணின் கணவன், தனது நண்பனொருவருடன் சேர்ந்து, வீட்டில் கசிப்பு குடித்துள்ளார். இது மனைவிக்கு பிடிக்கவில்லை. வீட்டில் வைத்து கசிப்பு குடிக்க வேண்டாமென தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து நண்பன் தனது வீட்டிற்கு சென்றவிட்டார். வீட்டுக்கு பக்கத்திலிருந்த இன்னொரு வீட்டுக்குள் மனைவியை இழுத்து சென்று அடிக்க முற்பட்டுள்ளார் கணவன். எனினும், மனைவி அங்கு செல்லாமல் கணவருடன் இழுபறிப்பட்டு தப்பித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த கணவன், வீட்டில் வைத்தே மனைவியை கடுமையாக தாக்கினார்.

கணவனின் அடி தாங்க முடியாத மனைவி, கணவனை பயமுறுத்தி, தாக்குதலை நிறுத்த செய்வதற்காக தனது உடலில் மண்ணெண்ணெய ஊற்றியுள்ளார். “நீ சாவதற்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றினாய்“ என்றபடி, பீடி பற்றிவிட்டு, இன்னொரு குச்சியை தட்டி மனைவி மீது போட்டுள்ளார்.

உடல் முழுவதும் தீ பற்றிக்கொண்ட நிலையில், உறவினர்களால் காப்பாற்றப்பட்டு, பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here