லெப்.கேணல் ரத்னபிரிய பந்து மீண்டும் விசுவமடுவுக்கு: சென்டிமென்ட் ஆட்களிற்கு ஆதரவாக விமல்!

0

அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்ட லெப்டினன்ட் கேணல் ரத்னபிரிய பந்துவை மீண்டும் விசுவமடுவிலேயே பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார்..

மக்களின் கோரிக்கைக்கு அமைய லெப்டினன்ட் கேணல் ரத்னபிரிய பந்துவுக்கு மீண்டும் அதே பொறுப்பை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு தடையேற்படுத்தும் தனிப்பட்ட காரணங்கள் காணப்பட்டால் அது தொடர்பில் ஆராய்ந்து உரிய தீர்வு ஒன்றை வழங்குமாறும் விமல் வீரவங்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு, விஸ்வமடு சிவில் பாதுகாப்பு படைப் பிரிவிற்கு பொறுப்பாக இருந்த, லெப்டினன்ட் கேணல் ரத்னபிரிய பந்து, அண்மையில் அம்பேபுஸ்ஸ, சிங்க படைப்பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் விஸ்வமடு பகுதியில் இருந்து பிரியாவிடை பெற்று செல்லும் போது, அப்பகுதி மக்கள் சிலர் கண்ணீருடன் விடை கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here