சிறுமியை சீரழித்த பொலிஸ் அதிகாரி அடையாளம் காட்டப்பட்டார்!

தன்னை துர்நடத்தைக்கு உள்ளாக்கிய பொலிஸ் அதிகாரியை, பாதிக்கப்பட்ட சிறுமி அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண்பித்துள்ளார். இதையடுத்து சந்தேகநபரான பொலிஸ் அதிகாரியை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டது.

கிளிநொச்சியை சேர்ந்த 14 வயதான சிறுமி ஒருவர் பொலிஸ் அதிகாரியினால் துர்நடத்தைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டிருந்தது. சிறுமியின் தாயாரும் இந்த மோசமான செயலுக்கு உடந்தையாக இருந்தது, சிறுமியின் வாக்குமூலத்தில் அம்பலமானது.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் இது தொடர்பாக கடந்த மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நேற்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. பொலிஸ் அதிகாரி, வாகன சாரதியென இருவர் சிறுமியால் அடையாளம் காட்டப்பட்டனர். சிறுமியை துர்நடத்தைக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டு சாரதி மீது இல்லாததால், அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.  பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here