‘பாவப்பட்ட பணத்தில்’ 963 ரூபாவை காணவில்லை: இது முட்டாள்களின் வேலையாம்!

வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவிற்கு வழங்குவதற்காக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் திரட்டிய “பாவப்பட்ட பணத்தில்“ 963 ரூபாவை காணவில்லையென பொலிசார் கூறியுள்ளனர்.

மாணவர்களால் தவராசா வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்ட “பாவப்பட்ட பணத்தில்“ 6 ஆயிரத்து 37 ரூபாவே இருந்ததாக கூறியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிற்கு தன்னால் வழங்கப்பட்ட 7,000 ரூபாவை சி.தவராசா அண்மையில் திருப்பி தருமாறு கோரியிருந்தார்.

இதையடுத்து கிழக்கு பல்கலைகழக மாணவர்கள், ஒவ்வொருவரிடமும் தலா ஒரு ரூபா வீதம் பொதுமக்களிடம் சேகரித்து, அந்த பணத்துடன் யாழ்ப்பாணம் வந்திருந்தனர்.

மாணவர்கள் வருவதையறிந்து தவராசா கொழும்பிற்கு சென்றுவிட்டார். இதனால் தவராசாவை சந்திக்க முடியாத மாணவர்கள், அவரது வீட்டு வாசலில் “பாவப்பட்ட பணத்தை“ பையில் வைத்து கொளுவிவிட்டு சென்றனர்.

இது பற்றி பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிசார் அந்த பணத்தை எடுத்து சென்றனர். பொலிஸ் நிலையத்தில் வைத்து பாவப்பட்ட பணத்தை எண்ணிப்பார்த்தபோதே, 963 ரூபா குறைவாக இருந்தது தெரியவந்தது.

இதேவேளை, பாவப்பட்ட பண விவகாரம் குறித்து தவராசா கருத்து தெரிவித்தபோது- “இது சில முட்டாள்களின் செயல். இதைக்கண்டு அச்சமடைய போவதில்லை. இதைப்பற்றி அலட்டிக்கொள்ளப் போவதுமில்லை“ என எகத்தாளமாக குறிப்பிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here