கோட்டாவிற்கு ஆதரவாக நாளை மட்டக்களப்பில் 101 பிரச்சார அலுவலகங்களை திறக்கிறது பிள்ளையான் அணி

நாளை முற்பகல் 11.45 மணிக்கு ஒரே நேரத்தில் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கோட்டாபயவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளை ஆரம்பிக்கின்றது.

இது முதற் கட்ட நடவடிக்கை எனவும், இரண்டாவது கட்டமாக மேலும் 75 பணிமனைகள் திறக்கப்பட்டு பிரசார நடவடிக்கைகள் விரிவாக்கப்படும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

நாளை தலைமைச்செயலகத்தில் செயலாளர் பூ.பிரசாந்தன் தலைமையிலும்இ ஏனைய நூறு பணிமனைகளில் அந்தந்த பிரதேசஇ வட்டார அமைப்பாளர்களின் தலைமையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here