சுமந்திரனும், சிவசக்தி ஆனந்தனும் ஏன் வெளியேறினார்கள்?: பரபரப்பு தகவல்கள்!

பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று ஆறு கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு இடம்பெற்று வருகிறது. மாலை 5.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் நான்கு மணித்தியாலம் கடந்தும் கூட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த சந்திப்பில் இருந்து தற்போது எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் இருவரும் வெளியேறி விட்டனர்.

இரண்டு பேரின் வெளியேற்றம் குறித்தும் சமூக ஊடகங்களில் தவறான பல தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

கட்சிகளிற்கிடையிலான உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், இன்னொரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென கூறி சுமந்திரன் புறப்பட்டார். 7 மணிக்கு திட்டமிடப்பட்ட அந்த கூட்டத்தில் 30 பேர் காத்திருக்கிறார்கள் என குறிப்பிட்டு அவர் வெளியேறினார்.

வவுனியாவிற்கு செல்ல வேண்டியிருப்பால், நேரமாகி விட்டதென குறிப்பிட்டு சிவசக்தி ஆனந்தன் வெளியேறினார்.

முரண்பாடுகளால் அவர்கள் வெளியேறியதாக தவறான கருத்துக்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here