முன்னணி வில்லங்க நிபந்தனைகள்: பொது இணக்கப்பாடு முயற்சி தோல்வி!

ஆறு தமிழ் கட்சிகளை இணைத்து ஜனாதிபதி தேர்தலில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பல்கலைகழக மாணவர்களின் முயற்சி இன்று பின்னடைவை சந்தித்தது. தமிழ் பக்கத்தில் இன்று காலையில் குறிப்பிட்டதை போலவே, இன்று கட்சிகள் பொது ஆவணத்தில் கையெழுத்திடவில்லை.

கட்சிகள் முன்வைத்த ஆவணத்தின் அடிப்படையில், பல்கலைகழக மாணவர்களால் இறுதி ஆவணமொன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அந்த ஆவணத்தை பிரதான வேட்பாளர்கள் இருவரிடமும் சமர்ப்பித்து, அதற்கு சம்மதம் தெரிவிப்பவருக்கே ஆதரவளிக்க வேண்டுமென பல்கலைகழக மாணவர்கள் குறிப்பிட்டனர்.

ஆனால் அந்த வரைபின் உள்ளடக்கத்தில் கட்சிகளிற்கிடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இன்றைய சந்திப்பு குழப்பமடைவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி விடாப்பிடியாக பல்வேறு குழப்பமான நிபந்தனைகளை விதித்ததே காரணமென தமிழ்பக்கம் அறிந்தது. மற்ற கட்சிகளை சங்கடப்படுத்தும், சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதித்ததால் குழப்பமடைந்தது.

அந்த வரைபை பிரதான வேட்பாளர்கள் ஏற்காவிட்டால் தேர்தலை புறக்கணிப்பது என்ற விடயம் உள்ளடக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டது. எனினும், அதற்கு மற்ற கட்சிகள் உடன்படவில்லை.

இதனால் ஆக்ரோசமான வாதப்பிரதிவாதங்கள் நடந்தன.

இந்த வரைபை பொது வேட்பாளர்கள் ஏற்காத பட்சத்தில், அடுத்தது என்ன செய்வதென்பதையும் ஆலோசிக்க வேண்டுமென முன்னணி விடாப்பிடியாக நின்றது. அதை அடுத்த கட்டமாக ஆராயலாம், இப்பொழுது நிபந்தனைகளை குறிப்பிடுவோம் என மற்ற கட்சிகள் குறிப்பிட்டதால், அந்த விடயத்தில் அமைதியாகிய முன்னணி, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரைபை நிராகரிப்பதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென அடுத்த வில்லங்கத்தை கிளப்பியது. எனினும், தமிழ் அரசு கட்சி, புளொட் அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் இன்றைய சந்திப்பு வெற்றியளிக்கவில்லை.

நாளை மீண்டும் கூடிஇ கையொப்பமிடலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இன்றைய கருத்தின் அடிப்படையில், வரைபில் திருத்தம் செய்வதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். எனினும்இ இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தால், அதில் கையொப்பமிட மாட்டோம் என தமிழ் அரசு கட்சி, புளொட் அழுத்தம் திருத்தமாக தெரிவித்தன. இடைக்கால அறிக்கையை நிராகரிப்பதாக குறிப்பிடப்படாவிட்டால், தாம் கையொப்பமிட மாட்டோம் என முன்னணி சொன்னது. இதனால் நாளையும் கையொப்பமிடுவது சந்தேகமே.

ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிப்பதாக பகிரங்க அறிவித்தல் விடுத்த நிலையில், முன்னணியை இந்த கலந்துரையாடலில் இணைத்தமை தவறானதென பங்குபற்றிய உறுப்பினர்கள் பலர் சந்திப்பின் பின்னர் தமிழ்பக்கத்திடம் குறிப்பிட்டனர். அவர்கள் தமது நிலைப்பாட்டை மீளப்பெற்ற பின்னர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தாலே, வெளிப்படையான சந்திப்பாக இருந்திருக்கும், தற்போது பகிஷ்கரிப்பை நோக்கி மற்ற கட்சிகளை தள்ள அல்லது இந்த முயற்சியை குழப்ப முன்னணி முயற்சிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here