என்னுடைய வாழ்க்கை பௌத்த சித்தாந்தத்தின் அடிப்படையிலானது; தமிழர்களின் வாக்கு சுப்பமார்க்கெட்டில் வாங்குவதல்ல: ஆளுனர்!

சம குடிகாளாக தமிழர் வாழ்ந்தால் நாடு பூரணமாகும்!! ஆளுனர்!!

இந்தநாட்டில் சமத்துவமான,சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும். அதனை கேட்கவேண்டியவர்களிற்கு நாம் பகிரங்கமாக சொல்ல தயாராக இருக்கின்றோம். என்று வடக்கு மாகாண ஆளுனர் சுரேன் இராகவன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற வடக்குமாகாண பண்பாட்டு விழாவில் கலந்து கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் மேற்படி தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்…

“தமிழ்” என்று சொல்லும் போதே தடங்கல் இருக்கும் என்பதை ஆளுனராக கடமையாற்றிய கடந்த 8 மாதங்களில் அறிந்து கொண்டேன். ஆனால் அந்த தடைகளை நாம் உடைத்து மீண்டும் தலைதூக்கிய ஒரு தேசமாக, உலகம் எம்மை திருப்பி பார்க்ககூடிய ஒரு தேசமாக உலகிற்கு நன்மை செய்யகூடிய தேசமாக மாறவேண்டும். அதற்காக உடைந்து போயிருக்கின்ற அத்திவாரகற்களை ஒன்றாக சேர்த்து மணிமண்டபம் கட்டவேண்டும் என்பது தான் எனது அவாவாக இருக்கிறது.

நான் கொழும்பிலே வாழ்ந்து, பணிபுரிந்து, வெளிநாட்டிலே கல்விகற்று, என்னுடைய வாழ்கையை எளிமையான பௌத்த சித்தாந்தத்தின் கீழாக வைத்திருந்தாலும் என்னுடைய ஆன்மா இன்னும் தமிழனான இருக்கிறது என்பதை இந்த நாதஸ்வர வித்துவான்கள் நினைவு படுத்தி கொண்டார்கள். நான் அடிப்படையாக தமிழனாக இருக்கின்றேன் அப்படிதான் இருக்கவேண்டும் என்ற நினைவு எனக்கு வந்தது.

இன்று ஒரு அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு வரலாறு எங்களை தள்ளியிருக்கின்றது. நீதி, நியாயம், தர்மம் எங்கு இல்லலையோ, இந்த அப்பாவி மக்களை பாதுகாக்ககூடிய அரசு, அரசாங்கம், அரசன் எங்கு இல்லையோ அந்த நாடு ஒருநாளும் விடிவடையாது.

எனவே இந்தநாட்டில் சமத்துவமான,சம குடிகளாக, கௌரவத்துடன் தமிழர்கள் எப்போது வாழ்கின்றார்களோ அப்போது தான் இலங்கை ஒரு பூரணமான நாடாக மாறும் என்று கேட்கவேண்டியவர்களிற்கு நாம் பகிரங்கமாக சொல்ல தயாராக இருக்கின்றோம்.இது தான் எங்களுடைய ஆதங்கம்.இதற்காக தான் 72 வருடங்களாக எமது ஆவணைகளையும், வேதனைகளையும் வித்தியாசமான முறையிலே முன்வைத்துள்ளோம்.

நான் கொழும்பு போகும் போது என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி தமிழர்களது வாக்குகளை எப்பிடி பெற்றுக்கொள்ளலாம் சொல்லுங்கள் என்று. தமிழர்களுடைய வாக்கு சுப்பர்மாக்கெட்டில் விற்கபடுகின்றது என்று அவர்கள் நினைக்கின்றார்கள். நான் அவர்களிற்கு சொல்லும் ஒரே பதில் உங்கள் அரசாங்கம், அரசு, அரசியல் 72 வருடங்களாக நாம் வேண்டுவதை புரிந்துகொள்ளாமல் நீங்கள் அரசியல் செய்கின்றீர்கள். தமிழர்கள் கேட்பது ஒரே ஒரு விடயம் எமது கலை, கலாசாரம், அரசியலையும், இனத்தையும், சமமாக, சமாதானமாக வாழவேண்டிய இடத்தை மட்டும் எங்களிற்கு தாருங்கள் என்பது மட்டுமே எங்கள் கோரிக்கை.

அந்த வேண்டுகோள் திரும்பவும் கேட்டகபடவேண்டும் அது கேட்டவேண்டியது கொழும்பிற்கோ, புதுடில்லிக்கோ, ஜெனிவாவிற்கு என்றாலும், அங்கே கேட்க வேண்டும். தமிழர்கள் ஒரு இனம். ஆகையினால் இனத்திற்கு சொந்தமான எல்லா உறுதிகளும் எங்களுக்கு தேவையானது, அந்த உறுதிகளையும் உண்மைகளையும் எங்களுக்கு தர வேண்டும் என்பது தான் எமது வேண்டுகோள் என்றார்

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here