லண்டன் இரவு விடுதியில் தகராறு: உலகின் அதிவேக மனிதன் உசைன் போல்ட் மோதலா?

ஒலிம்பிக் சாதனை மன்னன், உலகின் அதிவேக மனிதன் என்று அழைக்கப்படும் ஜமைக்காவின் தடகள நட்சத்திரம் உசைன் போல்ட் லண்டன் இரவு விடுதியில் போதையில் சில நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு இன்னொரு குழுவுடன் மோதியதாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ரியால்டி ஷோ டிவி நட்சத்திரங்களுடன் இரவு விடுதி ஒன்றில் உசைன் போல்ட் உள்ளிட்டோர் மதுபானம் அருந்தியுள்ளனர். அதன் பிறகு இன்னொரு கும்பலுடன் சண்டை ஏற்பட்டுள்ளது.

கிளப்புக்கு வெளியே தெருவில் சுமார் 30 பேர் கொண்ட கும்பல் ஒருவரையொருவர் அடித்து உதைத்துக் குத்துக்களைப் பரிமாறிக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது, இதில் ஒரு போன் பதிவு ஒன்று உசைன் போல்ட் சமாதானம் செய்து வைக்கத்தான் என்பதாகப் பதிவாகியுள்ளது .

6 அடி உயரமுள்ள ஒருவரை உசைன் போல்ட் சட்டைக் கொலரைப் பிடித்து காருக்கு முன்னால் கொண்டு வந்ததான காட்சியும் வீடியோவில் உள்ளது, இதில் உசைன் போல்ட் கருப்புத் தொப்பி அணிந்ததாகத் தெரிந்தது.

“உசைன் போல்ட் தன் நண்பரை அடி உதையிலிருந்து காப்பாற்ற ஒருவர் மீது ஒரு குத்து விட்டார். இவையெல்லாம் வெகுவிரைவில் நடந்து முடிந்தது, இதன் பிறகு ஒருவரையொருவர் தனித்தனியாகத் தாக்கிக் கொண்டதும் நிகழ்ந்தது” என்று தி சன் கூறியுள்ளது.

நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, உசைன் போல்ட் அமைதியை ஏற்படுத்தினார், தன் நண்பர்களை உடனடியாக காரில் ஏற்றி அனுப்பி விட்டு தானும் தனி காரில் இரவு 3 மணியளவில் கிளம்பினார் என்றார்.

பிறகு அந்த இடத்துக்கு பொலிஸார் வந்தபோது சண்டை நடந்ததற்கான தடயங்களே இல்லாமல் காட்சியளித்தது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here