கையில் வைத்திருந்தது என்ன? : மோடி விளக்கம்

மாமல்லபுரம் கடற்கரையில் குப்பை அள்ளும் போது தனது கையில் வைத்திருந்த கருவி என்ன என்பது பற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

சீன அதிபரை சந்திப்பதற்காக மாமல்லபுரம் சென்றிருந்த மோடி, நேற்று (12) காலை, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அங்கு கிடந்த குப்பைகளை அகற்றினார். இது தொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட மோடி, பொது இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளும்படி நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில் குப்பை அள்ளும் போது மோடி தனது கையில் வைத்திருந்த கருப்பு நிற பொருள் பற்றி பலரும் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்து டுவீட் செய்துள்ளார் மோடி. அதில், மாமல்லபுரத்தில் கடற்கரையில் குப்பைகளை அள்ளிய போது கையில் வைத்திருந்த பொருள் பற்றி பலரும் என்னிடம் கேட்டு வருகின்றனர். அது அக்குபிஷசர் ரோலர். அது மிகவும் உதவிகரமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தான் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருப்பது போன்ற சில போட்டோக்களை மோடி பதிவிட்டுள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here