மாடர்ன் பெண்ணாக மாறி மது அருந்த மறுத்த மனைவிக்கு முத்தலாக்!

மாடர்ன் பெண்ணாக மாறி மது அருந்தி, மாடர்னான உடைகளை அணிய மறுத்த மனைவியை, அவரது கணவர் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ள சம்பவம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்துள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பாத்திமா கூறுகையில், இம்ரான் முஸ்தபாவிற்கும் எனக்கும் 2015 ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில நாட்களிலேயே நாங்கள் டில்லிக்கு குடியேறி விட்டோம். சில மாதங்களுக்கு பிறகு நகரில் உள்ள மற்ற மாடர்ன் பெண்களைப் போன்று என்னையும் குட்டையான உடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தினார். அத்துடன் இரவு நேர பார்டிகளுக்கு செல்லவும், மது அருந்தவும் சொல்லி வற்புறுத்தினார். அதற்கு நான் மறுத்ததால் தினமும் என்னை அடித்து துன்புறுத்தினார்.

பல ஆண்டுகளாக என்னை அடித்து துன்புறுத்தி வந்த அவர், சில நாட்களுக்கு முன் என்னை வீட்டை விட்டு வெளியேறும்படி கூறினார். அதற்கு நான் மறுத்ததால் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார் என்றார்.

கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது தொடர்பாக பாத்திமா, பீகார் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

இது பற்றி பீகார் மகளிர் கழக தலைவர் தில்மானி மிஸ்ரா கூறுகையில், இப்பெண்ணை அவரது கணவர் அடித்து துன்புறுத்தியதுடன், கட்டாயப்படுத்தி 2 முறை கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். செப்ரெம்பர் 1 அன்று இப்பெண்ணிற்கு முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார். இப்பெண் அளித்துள்ள புகாரின் பேரில் அவரது கணவர் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி உள்ளோம் என்றார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here