வடமாகாண பண்பாட்டு பெருவிழாவில் பிரதேசவாதமா?: நான்கு மாவட்ட கலைஞர்கள் அதிருப்தி… கேலிக்கிடமான விருது!


வடமாகாண பண்பாட்டுப் பெருவிழாவில் வவுனியா, கிளிநொச்சி முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கலைஞர்கள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

வவுனியா மாவட்ட நகரசபை மண்டபத்தில் கடந்த வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்களாக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் பண்பாட்டு விழா நடைபெற்றது.

குறித்த நிகழ்வின் இறுதிநாள் நிகழவு நேற்று (சனி) அன்று வவுனியா மத்திய மகாவித்தியாலயத்தின் முன் ஆரம்பிக்கப்பட்ட கலை, பண்பாட்டு மரபுகள் சார்ந்த காட்சிப்படுத்தலுடன் ஊர்வலமாக நகர் வலம் வந்து புகையிரத நிலைய வீதி ஊடாக வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைத்தது. இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அதிதியாக கலந்து கொண்டார்.

வடமாகாண பண்பாட்டு விழாவில் வவுனியா கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் யாழ்ப்பாணக் கலைஞர்களுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆய்வரங்கு, கவியரங்கு, பட்டிமன்றம், விருதுவழங்கள், கலை நிகழ்வுகள் போன்ற ஒட்டுமொத்த நிகழ்விலும் யாழ்ப்பாணத்து கலைஞர்களுக்கே அதிக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.

இதன் காரணத்தினால் அதிருப்தியடைந்த பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் நேற்று இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்த்திருந்தனர்.

இதேவேளை, வழங்கப்பட்ட விருதுகள் தொடர்பாகவும் சர்ச்சையேற்பட்டுள்ளது. ஆசிரியராக பணியாற்றும் ஒருவருக்கு சிறந்த ஊடகவியலாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. அவர் ஊடகத்தில் பணியாற்றாதவர் என்பதுடன், பிரதேச பிரச்சனைகள் குறித்து ஒரு சில சிறு குறிப்புக்களை மாத்திரம் பத்திரிகைகளில் எழுதியவர் என்றும், தேர்வுக்குழுவில் உள்ளவர்களிற்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில் விருது வழங்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here