கம்பளை ஆசிரியையின் மரணம்: நீதிவானின் அதிரடி உத்தரவு!

கம்பளை கீரபனவில் காணாமல் போய் ஒரு வாரத்தின் பின் நீர்த்தேக்கத்தில் இருந்து மீட்கப்பட்ட பாடசாலை ஆசிரியையின் உடல் பாகங்கள் மேலதிக ஆய்விற்காக அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கம்பளை நீதிவான் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஆசிரியை உயிரிழந்தமைக்கான காரணம் குறித்த கம்பளை பொலிசாரின் அறிக்கை தொடர்பிலும், நீண்ட விசாரணை மேற்கொண்டார்.

செவ்வந்தி நிசன்சலா ரத்னாயக்க (27) என்ற ஆசிரியை கடந்த 1ம் திகதி பாடசாலையிலிருந்து திரும்பி வரும்போது, வீட்டுக்கு அருகில் காணாமல் போயிருந்தார்.

மகாவலி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மிதந்த ஆசிரியையின் சடலம் கடந்த 7ம் திகதி மீட்கப்பட்டது. மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்கள் நிலவிய நிலையில், அவரது முன்னாள் காதலரும் விசாரணைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். எனினும், பாதையில் சென்று கொண்டிருந்தபோது, வழுக்கி கால்வாய்க்குள் விழுந்து, நீரில் அடித்து சென்றிருக்கலாமென பொலிசார் கருதினர். தடயவியல் பொலிசாரும் இது குறித்த விசாரணை நடத்தினர்.

எட்டு நாட்களாக காணாமல் போன கம்போலா இளைஞர் பள்ளி ஆசிரியரின் பிரேத பரிசோதனைக்கு பின்னர், கம்போலா மாவட்ட நீதிபதி ஸ்ரீனித் விஜேசேகர, அவர் பக்கவாட்டு வடிகால் மற்றும் அவரது கால்வாயில் விழுந்ததாக நம்பப்படும் இடம் குறித்து விசாரணை நடத்தினார்.

நேற்று கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்த பொலிசார், கால்வாய்க்குள் விழுந்ததன் மூலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிட்டனர். மேலதிக பரிசோதனையின் மூலமே அதை உறுதி செய்யலாமென்றும் குறிப்பிட்டனர்.

கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை மன்றிற்கு அழைத்து, விசாரணையின் முன்னெற்றம் தொடர்பாக ஆராய்ந்த நீதிவான், கால்வாய்க்குள் இடறிவிழுந்ததாக நம்பப்படும் இடத்தையும் நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர், உடல் பாகங்களை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

முன்னதாக, கண்டி பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்ட அரச மருத்துவ அதிகாரி சிவா சுப்பிரமணியம் தனது அறிக்கையில், உடல் பாகங்களை அரசு பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்ப பரிந்துரைத்திருந்தார்.

ஆசிரியையின் உடல் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here