கோட்டாபயவை ஆதரிக்கும் முடிவை எடுக்கவில்லை: இ.தொ.க அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபயவை ஆதரிக்கும் எந்த முடிவிற்கும் வரவில்லையென அறிவித்துள்ளது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்.

அந்த கட்சியின் முக்கியஸ்தர் எம்.ராமேஸ்வரன் இன்று இதை தெரிவித்துள்ளார்.

இன்று காலையில் சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய மஹிந்த அமரவீர, இ.தொ.கவும் கோட்டாவை ஆதரிக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார்.

“நேற்றிரவு ஆறுமுகன் தொண்டமானுடன் பேசினோம். அவர் தனது நிலைப்பாட்டை ஊடகங்களிடம் பகிரங்கமாக இன்னும் அறிவிக்கவில்லையே தவிர, கோட்டாபயவையே ஆதரிக்க முடிவு செய்துள்ளதாக எம்மிடம் கூறினார்“ என மஹிந்த அமரவீர தெரிவித்திருந்தார்.

எனினும், இதனை மறுத்துள்ளார் எம்.ராமேஷ்வரன். வரும் 13ம் திகதி கட்சியின் தேசியசபை கூடியே இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here