பொகவந்தலாவையில் வெள்ளத்தால் 170ற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்வு!

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை கொட்டியாகல தோட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சுமார் 170ற்கும் மேற்பட்டவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர்.

புதன்கிழமை பிற்பகல் பெய்த கடும் மழைக்காரணமாக பொகவந்தலாவை கொட்டியாகல தோட்டத்தின் ஊடாக பாயும் கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்ததன் காரணமாக சுமார் 35 வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் இந்த வீடுகளில் வசித்த 35 குடும்பங்களை சேர்ந்த 170ற்கும் மேற்பட்டவர்கள் தற்காலிகமாக கொட்டிகலை தோட்டத்தின் வைத்தியசாலையில் தங்க வைக்கப்பட்டடுள்ளனர்.

இந்த வெள்ளம் காரணமாக தமது உடமைகளுக்கும் ஆவணங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் உடமைகள், ஆவணங்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் என்பன வெள்ளத்தில் அடிப்பட்டு சென்றள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பகுதியில் வாழந்த மக்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்த்துவதற்கு கொட்டியாகல தோட்ட முகாமை, பொகவந்தலாவை பொலிசார், கிராம உத்தியோகத்தர் மற்றம் பொதுமக்கள் நடவடிக்கைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கெசல்கமுவ ஓயா பெருக்கெடுத்தன் காரணமாக பொகவந்தலாவை பகுதியில் அமைந்துள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த ஆற்றின் பெருக்கெடுப்பு காரணமாக காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டமும் வெகுவாக அதிகரித்து வருவதாக நீர் தேக்கத்தின் கடமை நேர் உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

தினமும் பிற்பகல் வேலையில் இவ்வாறான மின்னல், இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருவதனால் பொது மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here