எதற்கு இந்த ஒளிவுமறைவு?: யாழ் பல்கலைகழக மாணவர்களை விமர்சித்த கஜேந்திரகுமார்!

தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்க முயற்சிக்கும் யாழ் பல்கலைகழக மாணவர்களின் முயற்சி தொடர்பாக சிறு விமர்சனமொன்றை வைத்துள்ளார் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

இன்று (9) யாழில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கும் தமது முடிவை அறிவித்தார். இதன்போது, யாழ் பல்கலைகழக மாணவர்களின் முயற்சியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் பங்கெடுப்பமு தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டபோது,

“இந்தப் பேச்சுக்களின் ஆரம்பத்தில் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிப்பது என்ற முடிவுதான் பெரும்பான்மையானர்வகளால் எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. எனினும் எத்தகைய இணக்கப்பாடு தேவை என்பது தொடர்பில் கட்சிகளுக்கு இடையில் எழுத்து மூலமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைத்த நிலையில் எமது யோசனைகள் அடங்கிய விபரங்களை நாங்கள் கொடுத்துள்ளோம்.

ஏனையவர்கள் கொடுத்த விடயங்கள் எமக்குத் தரப்படவில்லை. அவ்வாறு வழங்கப்படக்கூடாது என்ற கருத்துக்களே முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இந்த ஒளிவுமறைவு ஏனென்றே தெரியாதுள்ளது. ஆகவே பொதுவாகப் பேசுகின்ற விடயங்கள் பொதுவாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதில் ஒளிவுமறைவுகளுக்கு இடமிருக்க முடியாது. யாரும் யாரையும் காப்பாற்ற முடியாது. அதேநேரம் யாரும் இதிலிருந்து தப்பிக்கவும் முடியாது. ஆனாலும் தொடர்ந்து சந்திப்புக்கள் நடைபெற உள்ளமையினால் இது தொடர்பில் அதிகம் கூறுவது நாகரிகம் இல்லை“ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here