பூஜித, ஹேமசிறிக்கு 18ம் திகதி வரை விளக்கமறியல்

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பதவிநீக்கப்பட்ட முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோரை ஒக்ரோபர் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணை கோரிக்கையை இரத்து செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் கட்டளையிட்டதை தொடர்ந்து, தலைமை நீதவான் லங்கா ஜெயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.

ஜெயசுந்தர மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதற்கான பிரதான நீதவான் முடிவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்றம் இருவரது பிணையை இரத்து செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here