பாதுகாப்பு அமைச்சிடம் பாதுகாப்பு கோரினர் சிவாஜி, அனந்தி!

ஜனாதிபதி தேர்தலில் ஏன் களமிறங்கினோம் என்பதை நாளை பகிரங்கமாக தெரிவிக்கவுள்ளனர் சிவாஜி, அனந்தி கூட்டு.

நாளை காலை 10 மணிக்கு யாழில் உள்ள விடுதியொன்றில் இருவரும் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளனர்.

இதன்போது, ஏன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டோம் என்பதற்கான விளக்கத்தை இருவரும் தெரிவிக்கவுள்ளனர்.

இதேவேளை, தமது உயிருக்கு அச்சுறுத்தல் என தெரிவித்து அனந்தி, சிவாஜி பாதுகாப்பு அமைச்சிடம் பாதுகாப்பு கோரியுள்ளனர். அவர்களின் கோரிக்கை குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகிறது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here