காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது: மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை

கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார்.

டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சல்மான் குர்ஷித், நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார்.

பதவியை ராஜினாமா செய்ய வேண்டாம் என எவ்வளவோ கெஞ்சியும் ராகுல் காந்தி, தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அவரது இந்த நடவடிக்கையால் கட்சிக்குள் மிகப்பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது.

ராகுல் காந்தியின் முடிவை தாங்கள் மதிப்பதாகவும், அதே நேரத்தில், நெருக்கடியான சூழலில் கட்சி இருப்பதைப் பார்க்கும் போது வேதனையாக இருக்கிறது. கட்சிக்குள் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, எதிர்வரும் மராட்டியம், அரியானா சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி, வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தியான முகாமில் கலந்து கொள்ள நான்கு நாள் பயணமாக கம்போடியா செல்கிறார்.

ஆகஸ்ட் 10 ம் தேதி சோனியா காந்தி கட்சியின் இடைக்காலத் தலைவராக பொறுப்பு ஏற்றதில் இருந்து பல இளம் தலைவர்கள் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here