சம்பளம் கேட்ட ஊழியர்களை வேலையை விட்டே விரட்டிய மட்டக்களப்பு நிறுவனம்!

மட்டக்களப்பு கல்குடாவிலுள்ள சக்தி வாணி தனியார் ஆயுர்வேத மருத்துவ நிலையத்தில் தொழில் புரிந்து வந்த ஊழியர்கள் தமது சம்பளப் பணத்தினை கோரியபோது, அவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதன் நிறைவேற்று பணிப்பாளரே அவர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்டவர்கள், தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கடந்த 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிறைவேற்று பணிப்பாளருக்கு எதிராக, நேற்று (8) மாலை கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்.

அது தொடர்பான விசாரணை இன்று புதன் கிழமை காலை கல்குடா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

விசாரணையின் போது ஊழியர்களுக்கான சம்பளம் பணத்தினை வழங்குவதாக தெரிவித்து தமது நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு நிறைவேற்றுப் பணிப்பாளரினால் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து சம்பளத்தை பெற நிலையத்திற்கு சென்ற ஊழியர்கள் உள்ளே செல்ல விடாமல் தடுக்கப்பட்டு கதவை பூட்டி வெளியேற்றப்பட்டனர்.

தற்போது குறித்த நிலையத்திற்கு முன்பாக நின்று ஊழியர்கள் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

தங்களுக்கு வழங்கப்படுகின்ற மாதாந்த சம்பளப் பணம் ஒழுங்காக வழங்கப்படாமை, பெண்களுக்கான பாதுகாப்பு இன்மை, சம்பளத்தில் அதிகரிப்பு, ஊழியர் சேமலாப நிதி அறவீடு, மற்றும் ஒரு நிர்வாக தலைமைத்துவம் வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்து வந்த நிலையிலேயே தம்மை பணி நீக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சுமத்துகின்றனர்.


தமிழ் பக்கத்தின் செய்திகளை ஜேவிபி, தமிழ் வின் உள்ளிட்ட லங்காசிறி குழும ஊடகங்கள் மீள்பிரசுரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள தமிழ்பக்கத்துடன் இணைந்திருங்கள்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here