7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய அதிபர் கைது: உரிய நடவடிக்கைக்கு இ.தொ.க வலியுறுத்தல்!

கொத்மலை பிரதேசசபைக்கு உட்பட்ட வேவன்டன் பகுதி பாடசாலையில் 7 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 7ம் திகதி அவர் கைது செய்யப்பட்டார்.

தற்போது விளக்கமறியலில் அதிபர் வைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அதிபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இன்று மத்திய மாகாண ஆளுனர் கீர்த்தி தொன்னக்கோனை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார், இ.தொ.கவின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான்.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here